Namakkal

News June 21, 2024

சவர்மா சாப்பிட்டு உயிரிழந்த மாணவி; தாய் தொடர்ந்த வழக்கு

image

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் உணவகத்தில் மாணவி கலையரசி என்பவர் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் தனது மகள் கலையரசி மட்டுமின்றி இதே போன்று அடையாளம் தெரியாத தனது மகள் உள்பட 43 நபர்களுக்கும் சேர்த்து 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உயிரிழந்த மாணவி கலையரசியின் தாயார் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்

News June 20, 2024

மெல்வின் மெட்ரோ சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு

image

நாமக்கல் மெல்வின் மெட்ரோ அரிமா சங்கத்தின் 24-25ம் ஆண்டிற்கான புதிய இயக்குனர் குழு பொறுப்பேற்பு விழா நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. புதிய இயக்குனர் குழு தலைவராக வீரக்குமார் நிர்வாக செயலாளராக சுதாகர் சேவை செயலாளராக ஞானக்குமார் பொருளாளராக முருகேசன் ஆகியோர் பொறுப்பேற்றனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார்.

News June 20, 2024

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் இராஜேஸ்கண்ணன் இன்று விடுத்துள்ள அறிவிப்பில், நாமக்கல்லில் கள்ளச்சாராயம் யாரும் விற்கக்கூடாது என்றும், அதையும் மீறி சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றாலோ அவர்களைப் பற்றி தகவலை எனது கட்டுப்பாட்டில் உள்ள இந்த 8838352334 எண்ணில் வாட்சப் மூலம் தெரிவிக்கலாம் எனவும், தகவல் கொடுப்பவர்களின் பெயர் இரகசியம் காக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

News June 20, 2024

நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

image

நாமக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு குற்றவியல் சட்ட மாற்றங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருகின்ற ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்ற இந்த சட்ட திருத்த மாற்றங்களை சுட்டிக்காட்டி வழக்கறிஞர்கள் கோஷத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

News June 20, 2024

மானிய விலையில் நிலக்கடலை கிடைக்கும்

image

நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) மோகன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் வட்டாரத்தில் சித்திரை, வைகாசி பட்டத்தில் நிலக்கடலை பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. அதற்கு நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், மானிய விலையில் நிலக்கடலை விதைகளை கிடைக்கிறது என கூறியுள்ளார்

News June 20, 2024

நாமக்கல் அருகே ஆட்சியரின் திடீர் சோதனை

image

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா அவர்கள் பேருந்து நிலையத்தில், வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இடத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அருகில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டு, வியாபாரிகளிடம் சந்தை தினசரி செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

News June 20, 2024

நாமக்கல்லில் திருநங்கைகளுக்கு சிறப்பு குறைதீர் முகாம்

image

நாமக்கல்லில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது. திருநங்கைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கு ஒரே இடத்தில் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக சிறப்பு குறைதீா் முகாம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு தொடங்குகிறது என ஆட்சியர் உமா தகவல்

News June 19, 2024

நாமக்கல்: 8 இடங்களில் நீர் பரிசோதனை

image

நெல் வயல்களில், ஏரி தண்ணீருடன், நாமக்கல் நகராட்சியிலிருந்து வரும் கழிவு நீர் துாசூர் ஏரியில் கலப்பதால் நீர் மாசடைந்துள்ளதாக வந்த புகாரையடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் தலைமையிலான குழுவினர், நேற்று ஆய்வு செய்து, எட்டு இடங்களில் நீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். நெல் வயல்களில் ஏரி தண்ணீருடன், நகராட்சி கழிவு நீரும் கலந்ததால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டது.

News June 19, 2024

20% வரி குறைக்க மத்தியஇணை அமைச்சரிடம் மனு

image

சிறு, குறு &நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வருமான வரியை 20 % குறைக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜேவிடம் நாமக்கல்லில் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.நாடு முழுவதும் 9.26 கோடி விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ஆண்டுதோறும் ரூ. 6,000 உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், 17-வது நிதி விடுவிப்பு நிகழ்ச்சி உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் தொடக்கிவைத்தார் பிரதமர்.

News June 19, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள கட்டிடங்கள் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகளை மனிதர்களை கொண்டு சுத்தப்படுத்திக் கூடாது என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அவ்வாறு செய்பவர்கள் மீது இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றார்.

error: Content is protected !!