India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமகிரி என்ற பெயரில் இருந்து “நாமக்கல்” என்ற பெயர் உருவானதாக கூறப்படுகிறது. மேலும், “நாமகிரி” என்று அழைக்கப்படுவது 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை ஆகும். இது நகரின் நடுவில் உள்ளது. இவ்வூருக்கு “அரைக்கல்” என்றும் பெயர் இருந்தது. “நாமகிரி” என்பதே பின் நாளில் “நாமக்கல்” என உருவானதாக கூறப்படுகிறது. நாமக்கல் மக்களே உங்க ஊருக்கு எப்படி பெயர் வந்ததை கீழே கமெண்ட் பண்ணுங்க.
1. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் வாக்க்களர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
2.குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டம்
3. நாமக்கல்லில் இமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
4. நாமக்கல்லில் கூட்டுறவு வார விழா நாளை நடைபெறுகிறது
5. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு விருந்து பணிக்காக எஸ் பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம் நாமக்கல் – வேத பிறவி (94981 67158), ராசிபுரம் நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர்- ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கூட்டுறவுத்துறை 71-ஆவது அனைத்திந்தியக்கூட்டுறவு வார விழா-2024 கூட்டுறவுகளிடையே ஒருங்கிணைப்பையும் பங்களிப்பையும் வலுப்படுத்துதல் நாளை (18.11.2024) திங்கட்கிழமை நாமக்கல் பரமத்தி ரோடு கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் பிற்பகல் 3:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் கலெக்டர், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் நேற்று 16ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் 1 முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே ரூ.5.40 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல்லில் வாக்காளர் சிறப்பு முகாம் 2ம் நாள் நடைபெறுகிறது. இதில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் வாக்காளர்கள், ஆதார் எண் இணைப்பவர்கள், பெயர் நீக்கம், பெயர், வயது, பாலினம், கதவு எண், முகவரி பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும், தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாற்றுதல் போன்ற பணிகளுக்கு தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுசாவடிகளில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொள்ளலாம்.
1) இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கைதுக்கு கண்டனம் தெரிவித்து நாமக்கல்லில் காலை 11.30க்கு ஆர்ப்பாட்டம். 2) பாரதிய கிசான் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நாமக்கல்லில் நடைபெறுகிறது. 3) நாமக்கல் கவிஞர் பேரவை சார்பில் நேரு பிறந்த நாள் சேவையாளருக்கு பாராட்டு விழா நாமக்கல்லில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது.4) நாமக்கல்லில் பல்வேறு பகுதியில் மழை.
1.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
2.நாமக்கல்லில் கார்த்திகை மாதம் தொடக்கம் – கோயில்களில் குவிந்த பக்தர்கள்
3.நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவச அலங்காரம் அணிவிப்பு
4.நாமக்கல் மாவட்டதில் பல்வேறு இடங்களில் கொட்டிய மழை
5.நாமக்கல்: சாலை விபத்தில் மூவர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – சுகவனம் (9498174815), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 16ந் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே ரூ 5.40 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.