India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் உதவித்தொகை பெற்று வரும் இளைஞர்கள் தொடர்ந்து உதவித்தொகையை பெற சுய உறுதிமொழி ஆவணம் ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்கள், உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை சமர்ப்பிக்கும்படி ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் முதியோர் (ம) ஓய்வூதிய உதவித்தொகை குடும்ப அட்டைதார்களுக்கு கூட்டுறவுத்துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளதாக எம்.பி ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். எனவே, உங்கள் பகுதியில் இலவச வேட்டி, சேலை வழங்கும் தேதி குறித்து தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியை சேர்ந்த நியாய விலைக்கடைகளை அணுகவும்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை சினிமா பாணியில் சேஸ் செய்து போலீசார் பிடித்தனர். இந்நிலையில், சம்பவத்தின் போது கைதிகளில் ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், வழக்கில் பிடிபட்ட இருவருக்கு தலா
12 ஆண்டுகள் சிறை தண்டனையும் எஞ்சிய 4 பேருக்கு தலா 24 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து திருச்செங்கோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

நாமக்கல் அரசு ஆண்கள் (தெற்கு) மேல்நிலை பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி, அக்.14ந் தேதி அரசு/தனியார் பள்ளி 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், அக்.15ந் தேதி அரசு/தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் காலை 09.30 மணியளவில் போட்டிகள் நடைபெறுகிறது. போட்டி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 04286292164 என்ற எண்ணைத் தொடர்புக் கொள்ளவும்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே!

நாமக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகளில் 77,434 விவசாயிகள் பதிவு செய்து அடையாள எண் பெற்றுள்ளனர். மீதமுள்ள 13,416 விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளது பதிவு செய்யாதவர்கள் வரும் 25ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்

பள்ளிபாளையம் வட்டாரத்திலுள்ள எலந்தக்குட்டை, காடச்சநல்லூர், களியனூர், கொக்கராயன்பேட்டை, குப்பாண்ட பாளையம், ஓடப்பள்ளி, பாதரை, பல்லக்காபாளையம், சௌதாபுரம், தட்டான்குட்டை, படவீடு, ஆலாம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி/நகராட்சி/பேரூராட்சி அலுவலகங்களில் கல்வி கடன் முகாம் அக்.16ந் தேதி காலை 09 முதல் 01 மணி வரை நடைபெறவுள்ளது. கல்வி கடன் தேவைப்படும் பள்ளிபாளையத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு பயன்பெறலாம்.

நாமக்கல் மக்களே தேர்தல் நெருங்கி வருவதால் வாக்களிப்பது ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை. 18 வயது நிறைந்தவர்கள் இப்போது https://voters.eci.gov.in அல்லது <

நாமக்கலில் இருந்து இன்று செவ்வாய் மாலை 3:52 மணிக்கும், இரவு 11:40 மணிக்கும் காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்லவும், இரவு 8:45 மணிக்கும், இரவு 8:51 மணிக்கும் பெங்களூரூ, மாண்டியா, மைசூர் போன்ற பகுதிகளுக்கும் செல்லவும் ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. எனவே, நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.