India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்செங்கோடு அடுத்த கீழேரிப்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் முனுசாமி (51). இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் இருந்தார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முனுசாமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 26 வயது வாலிபர் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரை, சந்தோஷ் என்பவர் ஆபாச செயலி மூலம் ஒரு இடத்திற்கு வரவழைத்துள்ளார். அப்போது அங்கிருந்த மேலும் 6 பேர், மாணவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி ரூ.30,000 பணம் பறித்துள்ளனர். இதுகுறித்து மாணவர் அளித்த புகாரின் பேரில், நாமக்கல் போலீசார் 3 பேரை கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 20 செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு எண்ணெய் வித்துப் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் 04286 266345, 266650, 7010580683, 9597746373, 9943008802 என்ற தொலைபேசி எண்களை அணுகி பயன்பெறலாம் என வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
➤நாமக்கல்: ஐடிஐயில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
➤புரோ கபடிக்கு தேர்வான பரமத்தி வேலூரை சேர்ந்த தனசேகரன் என்ற வீரரை ரூ.9.4 லட்சத்திற்கு ‘யு மும்பா அணி’ ஏலத்தில் எடுத்தது.
➤நாமக்கல்லில் டாக்டர்கள் ஸ்டிரைக்: நோயாளிகள் அவதி
➤நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு
➤நாமக்கல்லில் இன்று மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சேலம், ஓமலூர் மெயின் ரோடு ஸ்வர்ணபுரி என்ற முகவரியில் செயல்படும் சேலம் கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வரும் 19.08.2024 முதல் 06.09.2024 வரை நடைபெற உள்ளது.மேலும் தகவலுக்கு 9444396850, 94424 86276 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 17ஆம் தேதி காலை வரை பதிவான மழை அளவு விபரம்: எருமப்பட்டி 3 மிமீ, மோகனூர் 52 மிமீ, நாமக்கல் 3 மிமீ, பரமத்திவேலூர் 74 மிமீ, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் 6.20 மிமீ என மொத்தம் 138.20 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புரோ கபடி லீக் 11வது சீசனின் ஏலம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் 12 அணிகள் ஏற்கனவே 88 வீரர்களை தக்கவைத்து கொண்ட நிலையில் 212 இடங்களுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த தனசேகரன் என்ற வீரரை ரூ.9.4 லட்சத்திற்கு ‘யு மும்பா அணி’ ஏலத்தில் எடுத்தது. இவர் யுவா கபடி சீரிஸில் சிறப்பாக விளையாடியிருந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 25 மி. மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 11 மி.மீ.யும், அடுத்த 2 நாட்கள் முறையே 7 மற்றும் 8 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரி ஆகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் நாமக்கல் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ்1, பிளஸ்2 தேர்ச்சி, தோல்வி அல்லது ஏதாவது ஒரு டிகிரி டிப்ளமோ பெற்ற மாணவர் மாணவியர்களுக்கான நேரடிச் சேர்க்கை 31.08.24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04286-29959, 04286-267876, 9499055844 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.