India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள மின் செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தில் மின்சாரத்துறை சார்பாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இவை புதன்கிழமை 6ஆம் தேதி பள்ளிபாளையம், 16ஆம் தேதி திருச்செங்கோடு, 20ஆம் தேதி பரமத்தி வேலூர், 13ஆம் தேதி ராசிபுரம், 27ஆம் தேதி ஆகிய பகுதிகளில் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த இரு தினங்களாக விலை குறையாமலும் உயராமலும் தொடர்ந்து இதே நிலையில் மாற்றமில்லாமல் நீடிக்கிறது. மழை, குளிர் உள்ளிட்ட காரணங்களால் மேலும் முட்டை விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்ட இளைஞர்களுக்கு தேர்வு முகாம் நடைபெறும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு வரும் 7ஆம் தேதி தேர்வு முகாம் நடைபெற உள்ளதால் ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் தினந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, நாளை 5/11/2024 செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில் வார்டு எண் 24 தான்தோன்றி தெருவிலும், காலை 11 மணியளவில் வார்டு எண் 39 கொண்டிசெட்டிபட்டி தெருவிலும் நாமக்கல் மாநகராட்சி மூலம் நடைபெறும் முகாமில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), இராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – ராமகிருஷ்ணன் (9498168464) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் நோக்கத்துடன் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் 50 சதவீத அரசு மானியத்துடன் கூடிய தீவன பயிர் சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதுதங்கள் பகுதிகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி பயன்பெறலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வேளாண் துறையின் சார்பில் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் செயல்படுகிறது. வாகனம் மூலம் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளிடமிருந்து மண் மற்றும் நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்து மண் வள அட்டை அன்றைய தினமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர், விதவை கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி கோரிக்கைகள் குறித்து மொத்தம் 347 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தார்.
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. ஐப்பசி மாத திங்கள்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
நாமக்கல் பேருந்து நிலையத்தில் இன்று காலை பயணிகள் கூட்டம் அலைமோதியது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து இன்று அவரவர் சொந்த ஊர்கள் மற்றும் வேலை சம்பந்தமாக வெளியூர் செல்லும் நபர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் குவிந்தனர் இதனால் ஈரோடு, சேலம், துறையூர், திருச்சி, மதுரை ஆகிய பேருந்துகளில் அதிக அளவு கூட்டம் அலைமோதியது.
Sorry, no posts matched your criteria.