India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் சிறப்பு முகாம் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அடுத்த வாரமும் நடைபெற உள்ளது. இதில் பெயர் நீக்கம் செய்வது மற்றும் திருத்தங்கள் செய்வது போன்ற தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே நாமக்கல் மாவட்டம் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லாத குடும்ப அட்டைதாரர்கள் தங்களது உரிமத்தினை விட்டு கொடுக்க விருப்பமுள்ளவர்கள் உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் வலைதளத்தின் www.tnpds.gov.in மூலமாக தங்களது குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மண தாஸ் (9443286911), இராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – சிவக்குமார் (9498176695), வேலூர் – ரவிச்சந்திரன் (9498169276) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்று திடீரென வயிற்று வலியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பள்ளிபாளையத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் தடகளத்தின் சார்பில் ஈரோட்டில் நடைபெற்றுவரும் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு தடகளப்போட்டிகள் கடந்த நவ.06ஆம் தேதி முதல் நவ.08ஆம் தேதி வரை பெண்களுக்கான தடகளப்போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் நாமக்கல் மாணவி திவ்யா கலந்துகொண்டு நேற்று தங்கப்பதக்கம் வென்றார்.
நாமக்கல் மாவட்டத்தில் உர இருப்பில் யூரியா 2,394, டிஏபி 1,497, பொட்டாஷ் 1,230, காம்ப்ளக்ஸ் உரங்கள் 2,725 மற்றும் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் 388 மெட்ரிக் டன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உர விநியோகம் மற்றும் இருப்பினை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான நிலையான கண்காணிப்புக் குழுவினா் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனா் என வேளாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கூட்டுறவு பணியாளர் நாள் நிகழ்ச்சி இன்று கலெக்டர் அலுவலக இரண்டாவது தளத்தில் உள்ள மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கூட்டுறவு பணியாளர்கள் ஓய்வு பெற்ற கூட்டுறவு பணியாளர்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 8ம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம். எருமப்பட்டி 5 மி.மீ, மோகனூர் 7 மி.மீ, திருச்செங்கோடு 4.80 மி.மீ, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 1.50 மி.மீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 18.30 மி.மீ மழை பதிவாகி உள்ளது என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம், வரும் 9ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், இராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் (ம) குமாரபாளையம், வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதன் காரணமாக ஏற்பட்ட குளிர், இதனால் முட்டையின் நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து அதே ரூ 5.40 என ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையில் நீடித்தது.
Sorry, no posts matched your criteria.