Namakkal

News April 21, 2025

நாமக்கல்லில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

image

வெண்ணந்தூர் அருகே கடந்த 7-ம் தேதி 1,610 கிலோ ரேஷன் அரிசியுடன் கைதான சேலத்தை சேர்ந்த கோபால் (49) மற்றும் பள்ளிப்பாளையம் அருகே கத்தி காட்டி மிரட்டிய வழக்கில் கைதான சசிகுமார் (30) ஆகிய இருரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இந்தநிலையில் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

News April 21, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ் பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு வந்து பணி அலுவலர்களின் விவரம் நாமக்கல் – கோமதி (94981 67158), ராசிபுரம் அம்பிகா (9498106528), திருச்செங்கோடு -சிவக்குமார் (9498176695), வேலூர்- சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News April 20, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.86-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று (ஏப்.19) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.6 குறைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ.80 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-20) நடைபெற்ற கூட்டத்தில் கறிக் கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 20, 2025

நாமக்கல்: முட்டை விலை 20 பைசா குறைவு!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப். 20) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 3.95 பைசா நிர்ணயிக்கப்பட்டது.

News April 20, 2025

பணக்கஷ்டத்தை தீர்க்கும் தங்க முனியப்பன்!

image

நாமக்கல் மாவட்டம் மணப்பள்ளியில் கோயில் கொண்டிருக்கிறார் தங்க முனியப்பன். இங்கு நோய்நொடிகள் நீங்கவும், கொடுக்கல் வாங்கல் பிரச்னைகள் விலகிடவும் பக்தர்கள் வேண்டுதல் வைத்து வரம் பெறுகிறார்கள். அதேபோல், தங்க முனியப்பனை வேண்டிக்கொண்டால் நம்முடைய பணக் கஷ்டம், மனக் கஷ்டம் அனைத்தும் விரைவில் விலகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதுபோன்ற பிரச்னைகளால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 20, 2025

நாமக்கல் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 20, 2025

நாமாக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆர்டிஓக்கள் தலைமையில், வருகிற 22-ம் தேதி நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 19, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (19/04/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தீபா (9443656999) ,வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News April 19, 2025

நாமக்கல்: முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (19-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. கடந்த (ஏப்ரல் 9) முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து பத்து நாட்களாக முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.

News April 19, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.6 குறைவு!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.86-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இன்று (ஏப்.19) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.6 குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.80 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

error: Content is protected !!