Namakkal

News April 12, 2025

நாமக்கல்: கலெக்டர் அலுவலகத்தில் புதிய கட்டுப்பாடு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட அனைவரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வருமாறும், வரும் செவ்வாய்க்கிழமை 15.04.2025 காலை 9:00 மணி முதல் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகனங்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவுறுத்தப்படுள்ளது.

News April 12, 2025

எட்டுக்கை தாயின் கருணை – குழந்தை வரம் நிச்சயம்!

image

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள மேல்கலிங்கப்பட்டி என்ற இடத்தில் அமைந்துள்ள எட்டுக்கை மாரியம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டுமென்றால், பூமி மட்டத்தில் இருந்து கீழ்நோக்கி பல படிகள் இறங்கி தான் செல்ல வேண்டும். குழந்தை வரத்தை கொடுப்பதில் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் சூலத்தில் காகிதம் அல்லது உலோகத் தகட்டில் வேண்டுதல்களை எழுதி கட்டி வைத்தால் வேண்டுதல் வெகு சீக்கிரத்தில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

News April 12, 2025

வெண்ணந்தூர் பள்ளி ஆசிரியர் விபத்தில் பலி

image

நாமக்கல் , வெண்ணந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை விலங்கியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தனசேகரன் (வயது 50) நேற்று பழந்தின்னிப்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆசிரியர் தனசேகரனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 12, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (11/04/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200) ,வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News April 11, 2025

முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (11-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.

News April 11, 2025

பச்சை தண்ணீரில் விளக்கெரியும் அதிசய கோயில்!

image

ராசிபுரத்தை அடுத்த தட்டாங்குட்டை பகுதியிலுள்ள பச்சை தண்ணீர் மாரியம்மன் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் கோவில் பூசாரி அம்மனுக்கு வழிபாடு நடத்த, ஊர் தர்மகர்த்தாவிடம் விளக்கேற்ற எண்ணெய் கேட்டுள்ளார். அவர் சாமி உண்மை என்றால் விளக்கில் தண்ணீர் ஊற்றி பற்ற வையுங்கள் என்று கூற, பூசாரியும் சன்னதியில் அகல் விளக்கில் தண்ணீரை ஊற்றி விளக்கை ஏற்ற, விளக்கு கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த அதிசயம் இன்றும் நடக்கிறது.

News April 11, 2025

தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, பங்குனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று (11.04.2025) அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்க கவச சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News April 11, 2025

நாமக்கல் : ரூ.13,300 தொகுப்பூதியத்தில் வேலை வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட நலச்சங்கம் கீழ் பணிபுரிய காசநோய் சுகாதார பார்வையாளர் காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் 1 பணியாளர் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்க மாநில நலச்சங்கம் உத்தரவிட்டுள்ளது. தொகுப்பூதியம் ரூ.13,300 ஆகும். மேற்கண்ட பணியிடத்திற்கு வயது வரம்பு 65க்குள் இருக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு 04286 292025 என்ற அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

News April 11, 2025

ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை.

News April 10, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.89-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.7) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.7 குறைக்கப்பட்டது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் கறிக்கோளின் விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

error: Content is protected !!