India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் பொது மக்கள் குளிர்ச்சியான தண்ணீரை பெருவதில் அதிக ஆர்வம் காட்டுவர் இதற்காக நாமக்கல்லில் மண் பானை விற்பனை தொடங்கியுள்ளது ரூ.150 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகிறது. மானாமதுரை திருச்சியில் இருந்து கொண்டு வந்து நாமக்கல்லில் விற்பனை செய்யப்படுகிறது மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளதால் பானை விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரி நாகராஜன் கூறினார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மாணிக்கம் பாளையத்தில் வாகன சோதனையில் ரூ.6.2 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கத்திடம் இன்று ஒப்படைத்தனர். இதுகுறித்தது போலீசார் விசாரிக்கின்றனர்.
பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நினைவு தின நாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றிய குழு சார்பில் நடைபெற்றது. பகத்சிங் வரை படத்திற்கு மலர் மாலை அணிவித்து தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. செங்கோட்டைக்கு முருகேசன் மாதேஸ்வரி ஜெயபால் கோவிந்தசாமி மாணிக்கம் அய்யனார் மகாலிங்கம் காளியப்பன் மணி ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோட்டின் மையப் பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகே, சங்ககிரி மெயின் ரோட்டில் அமைந்துள்ள செல்லாஸ் ரெடிமேட் கடையிலும், ஸ்மார்ட் மொபைல் கடையிலும் கடையை உடைத்து கல்லாவில் இருந்த பணம் நேற்றிரவு திருடபட்டுள்ளது . சுமார் இரண்டு லட்ச ரூபாய் அளவில் திருடப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது .சிசிடிவி காட்சிகளை வைத்து திருச்செங்கோடு நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளதால் விருப்பமுள்ள நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் நாமக்கல் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தையும் 04286 233079 எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு தேர்தல் அலுவலர் மரு.ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடி முகவர்களுக்கு வரும் 24.03.2024 ராசிபுரம், நாமக்கல், பரமத்திவேலூர், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் தே.ஜ. கூட்டணியின் பாஜக வேட்பாளராக கே.பி ராமலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் பாஜக நேற்று 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்ட கட்டிட உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெகதீசன் தலைமையில் 20 இளைஞர்கள் மாற்று கட்சியிலிருந்து விலகி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் எம்பி ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுக கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
நாமக்கல் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த சூரியமூர்த்தி நேற்று இரவு திடீரென மாற்றப்பட்டார். இதனையடுத்து அதே கட்சியை சேர்ந்த மாதேஸ்வரன் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையானதால் வேட்பாளர் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது
உலக காடுகள் தண்ணீர் தினங்களை முன்னிட்டு நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் நாமக்கல் மாவட்ட வனத்துறை கல்லூரி சுற்றுச்சூழல் பசுமை மன்றங்களின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வனத்தில் தீ பரவினால் உடனடியாக தகவல் தர வேண்டும் எனவும் விலங்கு மனித மோதல் குறித்தும் பேசப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள் வனத்துறையினர் உள்ளிடோர் விழாவில் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.