India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும்.அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

சேந்தமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை (அக்.18) சனிக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களை குறி வைத்து குறைந்த விலையில் பட்டாசு மற்றும் பலகாரங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக கூறி இணையவழி சைபா் குற்றவாளிகள் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மேற்கண்ட மோசடியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சைபர் உதவி எண்: 1930 அல்லது www.cybercrime.gov.in மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (அக்டோபர்.16) நாமக்கல்-(தேசிங்கன் – 8668105073) ,வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (செல்வராஜு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (16.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்.16) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.20 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.

திமுகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் நாளை (அக்.17) வெள்ளிக்கிழமை ராசிபுரம் பேருந்து நிலையம் மற்றும் நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் புதிய தாழ்தள பேருந்துகளை துவக்கி வைக்கிறார். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் பொது மக்களை சந்திக்கிறார்.

நாமக்கல் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

நாமக்கல் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.
1)ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே SHARE!
Sorry, no posts matched your criteria.