India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.அதில்,பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.ச.உமா தேர்தல் பொதுப் பார்வையாளர் ஹர்ஜித் கவுர் ஆகியோர் முன்னிலையில் மக்களவைத் தேர்தல் 2024 தேவைக்காக காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கப்பட்டு அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இதில் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
மக்களவை 2024 பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சோதனைச் சாவடியில் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா காரை நிறுத்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். சோதனையின் போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்து 200 முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஷ்கண்ணன் தெரிவித்தாா். நாமக்கல்லில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 1,628 வாக்குச்சாவடிகளில் தோ்தல் பணிகளை மேற்கொள்ள கா்நாடக மாநில காவல் துறையினா், துணை ராணுவத்தினா் 190 போ் வந்துள்ளனா்.
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மாதேஸ்வரனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் P.ராமலிங்கம் வாக்கு சேகரித்தார். உடன் நகர்மன்றத் தலைவர் கலாநிதி, நகர திமுக செயலாளர்கள் ராணா ஆனந்த், நகர்மன்ற துணைத் தலைவர் பூபதி மற்றும் திமுக சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாமக்கல்லில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நாமக்கல் மாவட்ட மையம் சாா்பில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.1 முதல் ஜூன் 3 வரையில் நடைபெறவுள்ளது. அனைத்து வயதினரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
நாமக்கல் மாவட்ட காந்தி நகரில் தனியார் கல்வி நிறுவன பங்குதாரரும், பேருந்து உரிமையாளருமான சந்திரசேகர் வீட்டில் ஐடி சோதனை இன்று 03.04.2024 நடைபெற்று வருகிறது. தேர்தl சமயம் என்பதால் இவரது வீட்டில் பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டுள்ளதா ? என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மரு கேபி ராமலிங்கத்திற்கு ஆதரவாக ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு பரமத்திவேலூர் மற்றும் வெண்ணந்தூரிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா அவர்கள் தேர்தல் பொதுத்தேர்வுகள் ஹர்ஜித் கவுர் ஆகியோர் முன்னிலையில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 தேவைக்காக காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கப்பட்டு அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களில் வெயில் அதிகரிக்கும், வெப்பநிலை 102 டிகிரி தாண்டும் என்று வானிலை ஆலோசனை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, வானிலை முன் அறிவிப்பில் கூறியுள்ளதாவது, நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கோடை காலத்தில் ஒருவாரமாக 100 டிகிரி பாரன்ஹீட் ஆகும். நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.