Namakkal

News April 15, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலை திடீர் விலை சரிவு

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 415 காசுக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழி ரூ.10 குறைந்து ரூ.86 ரூபாய்க்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

News April 15, 2025

ஒரு க்ளிக் உங்க பணம் காலி சைபர் கிரைம் எச்சரிக்கை!

image

நாமக்கல் மக்களே அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.(ஷேர் செய்யுங்கள்)

News April 15, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.10 குறைவு!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இன்று (ஏப்.14) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.19 குறிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.86 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 15, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினம்தோறும் நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.அதன் அடிப்படையில் இன்று நாமக்கல்-கபிலன், 949817868, ராசிபுரம் நடராஜன், 9442242611, திருச்செங்கோடு சிவகுமார் மற்றும் வேலூர் பிரபாவதி 98427 35374 ஆகியோர் இன்று இரவு பணியில் ஈடுபடுகின்றனர்.

News April 15, 2025

முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (14-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. கடந்த (ஏப்ரல் 9) முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐந்து நாட்களாக முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.

News April 14, 2025

இராசிபுரம்: பேருந்து விபத்து.. 7 பேர் பணி பணியிடை நீக்கம்

image

நாமக்கல்: ராசிபுரம் நகரில் இருந்து (ஏப்.14) இன்று சேலம் சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து முன் சக்கரம் கழன்று ஓடிய விபத்தில், பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பேருந்து விபத்து ஏற்படும் அளவிற்கு அஜாக்கிரதையாக செயல்பட்ட ராசிபுரம் கிளை மேலாளர், வாகன மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப பணியாளர் என 7 பேரை பணி நீக்கம் செய்து அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார்.

News April 14, 2025

நாமக்கல்லில் நாகம் நேரில் வழிபட்ட கோயில்!

image

நாமக்கல், பெரியமணலியில் நாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. நாகம் நேரில் வந்து இங்குள்ள மூலவரை வழிபட்டதால் இத்தல இறைவன் நாகேஸ்வரர் என அழைக்கப்படுவது சிறப்பு. இங்கு வந்து சிவனாரை வழிபட்டுப் பிரார்த்திக்க, நாக தோஷம் முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், திருமணத் தடை நீங்க, கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டிக் கொள்கின்றனர்.

News April 14, 2025

நாமக்கல்லில் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைவு!

image

நாமக்கல் நகர நகை வியாபாரிகள் சங்கம் நிர்ணயித்த இன்றைய (14.04.2025) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு. ஒரு கிராம் விலை ரூ.8,755-க்கும், ஆபரண தங்கம் 1 பவுன் ரூ.70,040-க்கும், முத்திரை காசு 1 பவுன் ரூ.70,500-க்கும், முத்திரை காசு 1 கிராம் ரூ.8,813-க்கும், விற்பனை வெள்ளி ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனையாகிறது.

News April 14, 2025

நாமக்கல்: லாரியில் தவிடு ஏற்றும்போது நேர்ந்த விபரீதம்!

image

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பத்ரி மாத்தோ (45) நாமக்கல் காவேட்டிப்பட்டியில் உள்ள கோழித் தீவன ஆலையில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை, தவிடு மூட்டைகளை லாரியில் ஏற்றும்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த அவர், உயிரிழந்தார்.இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 14, 2025

நாமக்கல்லில் இன்று மழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இன்று மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை மாவட்டத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியில் செல்லும் மக்கள் குடையுடன் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

error: Content is protected !!