Namakkal

News April 16, 2024

நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு

image

தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் வணிகர்களுக்கான கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் ஏப் 19ல் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என கூறப்பட்டது.மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் வணிகர் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் உள்ளிட்ட அதிகாரிகள் வணிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

News April 16, 2024

நாமக்கல்: பாஜக சார்பில் வாகன பேரணி

image

மக்களவைத் தேர்தலில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மருத்துவர் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார்.தொகுதி முழுக்க தீவிர பிரச்சார மேற்கொண்டு வருகிறார்.அவருக்கு ஆதரவாக பாஜக நாமக்கல் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ராம்குமார் நாமக்கல் சட்டமன்ற தொகுதி புதுச்சத்திரம் ஒன்றியத்தில் பாஜக கொடியை கையில் ஏந்தியவாறு இருசக்கர வாகனம் பேரணி நடத்தி தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார்.

News April 16, 2024

திருமணத்தடை நீங்க கன்னியா வந்தன நிகழ்ச்சி

image

தேசிய சிந்தனை பேரவை சார்பில் கன்னியா வந்தன நிகழ்ச்சி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் இந்த பூஜையில் சக்திவேல் அனைவரையும் வரவேற்றார்.
21 பெண் குழந்தைகள் அலங்கரிக்கப்பட்டு வரிசையாக நிற்கவைக்கப்பட்டு அவர்களுடைய பாதத்திற்கு பால் சந்தனம் மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்து கன்னியா வந்தன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பூஜையினால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்

News April 15, 2024

நாமக்கல்: தபால் வாக்குப் பதிவு ஆட்சியர் ஆய்வு

image

நாமக்கல் மக்களவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் உமா தேர்தல் பார்வையாளர் ஹாகுன்ஜித்கௌர், முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான தபால் வாக்கு பதிவு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News April 15, 2024

முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்ந்தது

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி ), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்தது இம்மாதம் துவக்கம் முதல் ஒரு முட்டை விலை ரூ.4.15 ஆக நீடித்து வந்தது. கடந்த 12ஆம் தேதி முட்டை விலை 5 பைசா உயர்ந்து ரூ.4.20ஆனது. இந்த நிலையில், நேற்று மாலை, என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற, என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை, 10 பைசா உயர்த்தப்பட்டது.

News April 15, 2024

நாமக்கல்: மதுக்கடைகளை மூட உத்தரவு

image

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவினை முன்னிட்டு ஏப்ரல்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் ஏப்ரல்.19ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரை, வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன்.4ஆம் தேதி அன்று முழுவதும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூடுவதற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார். மேற்படி, உத்தரவினை மீறி செயல்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

News April 15, 2024

வேகத்தடை அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம்

image

பள்ளிபாளையம், சங்ககிரி சாலையில் வெடியரசம்பாளையம் என்ற பகுதியில், நேற்று இரவு தனியார் பேருந்து மோதி வட மாநில இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து சாலை மறியல் போராட்டத்தை மேற்கொண்டனர். சம்பவயிடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

News April 15, 2024

நாமக்கல்லில் காய்கனி மலர் அலங்காரம்

image

மக்களவைத் தேர்தலில் நாமக்கல் நாடாளுமன்ற மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹெர்குன்ஜித்கவுர் இன்று (15.04.2024) நாமக்கல் நகராட்சி உழவர் சந்தையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி அரங்கினை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இதில் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News April 15, 2024

நடிகை கௌதமி பிரச்சாரம்

image

மக்களவைத் தேர்தலில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் தமிழ்மணி போட்டியிடுகிறார். இந்நிலையில் இத்தொகுதி முழுவதும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே திரைப்பட நடிகை கௌதமி, அதிமுக வேட்பாளர் தமிழ் மணிக்கு ஆதரவாக நாமக்கல் நகர் முழுவதும் நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

News April 14, 2024

நாமக்கல் அருகே திடீர் தீ விபத்தால் பரபரப்பு

image

பள்ளிபாளையம் அடுத்துள்ள ஈக்காட்டூர் என்ற பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தகர சீட்டு பொருந்திய கூரை வீடு எதிர்பாராத விதமாக இன்று மாலை தீ விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். தீ விபத்துக்கான காரணங்கள் தெரிய வராத நிலையில் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.