India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை 24 தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹெர்குல் ஜித் கவுர் முன்னிலையில் இன்று நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு ரங்கோலி கோலமிட்டு தேர்தல் விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தல் ஒட்டி நாமக்கல்லில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாமக்கல் கோட்டை தொடக்க பள்ளியில் மாதிரி வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளன.வாக்கு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.வாக்குப்பெட்டிகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.பதற்றமான வாக்குசாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுகவை சேர்ந்த ஏகேபி சின்ராஜ் வெற்றிபெற்றார். இவர், மொத்தம் 55.24% வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுகவை சேர்ந்த காளியப்பன் 31.85 % வாக்குகளைப் பெற்று 2ஆம் இடம் பெற்றார். கடைசி இடத்தில் சுயேச்சை வேட்பாளர் சிவராஜி இருக்கிறார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 341. நாளை ஜனநாயக கடைமை ஆற்ற தவறாதீர்!
மக்களவை 24 நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா,இன்று எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குமர மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு மேற்கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளை பின்பற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மக்களவைத் 24 நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா வாக்குப்பதிவுக்கான இறுதி கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக ஏப்ரல் 19 அன்று அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த போஸ்டர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா, தலைமையில் மக்களவைத் பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் தபால் வாக்குகளை ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட வாகனத்தில் முழு பாதுகாப்புடன் திருச்சி மாநகராட்சி கலையரங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை திருச்செங்கோட்டை அடுத்த தோக்கவாடி பேருந்து நிறுத்தம் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த 6 வயது சிறுவன் பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிர் இழப்பு. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிறுவன் தந்தை படுகாயம் அடைந்தார்.கல்லூரி பேருந்துகள் தொடர்ந்து வருவதால் விபத்துகள் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்.
மக்களவை தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு தமிழக முழுவதும் நாளை மறுநாள் 19ஆம் தேதி நடக்கிறது. நாமக்கல் தொகுதியில் லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் மாதேஸ்வரன், அதிமுக சார்பில் தமிழ்மணி ,பாஜக சார்பில் ராமலிங்கம், நாம் தமிழர் சார்பில் கனிமொழி உட்பட 40 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இந்நிலையில் தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி , இன்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.
மக்களவை 24 நாமக்கல் நாடாளுமன்ற தேர்தல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ச.உமா நேற்று திருச்செங்கோடு வட்டம், எளையாம்பாளையத்தில் உள்ள விவேகானந்தா பெண்கள் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் உட்பட தேர்தல் அதிகாரிகள் பலர் உள்ளனர்.
நாமக்கல் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரியின் 3வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரியில் நடைபெற்றது.பிஜிபி கல்வி குழுமத்தின் தாளாளர் கணபதி தலைவர் பழனி ஜி. பெரியசாமி ஆகியோர் உரையாற்றினர்.தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அபூர்வா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வேளாண் பட்டதாரிகளுக்கு விருதுகள் பட்டங்களை வழங்கி பேசும்போது, அவரவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.