Namakkal

News December 19, 2024

நாமக்கல்லில் முட்டை, கறிக்கோழி விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 570 காசுகளாக நீடித்து வந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 560 காசுகளாக குறைந்துள்ளது.கறிக்கோழி ரூ.93-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.96-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News December 19, 2024

நாமக்கல்லில் இரட்டைக் கொலை: சிக்கிய மூவர்

image

வெப்படை அருகே தனியார் நூற்பாலையில், பணிபுரிந்துவந்த 2 வட மாநிலத்தவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், அருகில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரியும், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜன் லகூரி, மான்சிங் கக்ராய், தசரத் படிங்க் ஆகிய மூன்று வட மாநில இளைஞர்கள் மது போதையில் துபலேஷ், முன்னா ஆகியோரை கொலை செய்தது தெரியவந்தது. மூவரையும் வெப்படை போலீசார் நேற்று கைதுசெய்தனர்.

News December 19, 2024

பக்தர்களுக்கு சிறப்பு காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். மார்கழி மாத நான்காம் நாள் தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் ஆஞ்சநேயர் பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது.

News December 19, 2024

நாமக்கல்: விருதுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

image

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் கொடுப்பதற்கு நாளை (20/12/2024) கடைசி தேதி ஆகும். எனவே உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News December 18, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம்
2.நியாய விலைக் கடையில் ஆட்சியர் ஆய்வு
3.இரயில்வே துறை அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி. மனு
4.மேயரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்
5.எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

News December 18, 2024

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்களின் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 18, 2024

இரயில்வே துறை அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி. மனு

image

இன்று 18.12.2024 டெல்லியில் நடைபெற்ற சந்திப்பில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் V.S.மாதேஸ்வரன் M.P திருச்செங்கோடு கொக்கராயன்பேட்டை பகுதியில் ஒற்றை வழி மேம்பாலம் ஒன்று அனுமதிக்கப்பட்டுள்ளது,ஆனால் தற்போது அது திருத்தப்பட்டு இரட்டை வழி மேம்பாலம் ரயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. எனவே இரட்டை மேம்பாலம் அமைக்க கோரிக்கை மனு அளித்தார்.

News December 18, 2024

நாமக்கல்லில் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாமக்கல், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் 20ந் தேதி 11 மணிக்கு நாமக்கல் கோட்டத்திற்கு நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கிலும் மற்றும் திருச்செங்கோடு கோட்டத்திற்கு பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்குகளிலும் நடைபெற உள்ளது என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News December 18, 2024

எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அதன்படி நாமக்கல் காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராசு தலைமையில் குறைதீர் மனு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். பொதுமக்களின் குறைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News December 18, 2024

திருச்செங்கோடு: 2024-25ஆம் ஆண்டின் கல்வித் தலைவர் விருது

image

திருச்செங்கோடு இந்தியன் பப்ளிக் பள்ளியின் ஹைதராபாத்தில் நடந்த மதிப்புமிக்க ET TECH X விருதுகளில், 2024-25ஆம் ஆண்டின் கல்வித் தலைவர் விருது நிர்வாக இயக்குநர் டாக்டர். சி. ஷிவ்குமாருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது நல்ல மாற்றத்தை உண்டாக்கி, கல்வியின் எதிர்காலத்தை வடிவமைப்பவர்களைக் கொண்டாடுகிறது.

error: Content is protected !!