India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்ட வேளாண்மை துறையின் சார்பில் சிறப்பு மண் பரிசோதனை முகாம் வரும் 9ம் தேதி பள்ளிபாளையத்திலும் 16ம் தேதி மோகனூரிலும் 25ம் தேதி புதுச்சத்திரத்திலும் 30ம் தேதி மல்லசமுத்திரத்திலும் நடைபெற உள்ளது முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Insurance Advisor பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். +2 முடித்தவர்கள் இங்கே<

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை மூலமாக ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் இன்று தொடங்குகிறது. இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வேளாண்மைத் துறை மூலமாக ஊட்டச்சத்து பயறு வகை தொகுப்பு 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை இன்று (ஜூலை 04) 6வது நாளாக ரூ.5.75 ஆக நீடிக்கும் என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.101-க்கும், முட்டைக் கோழி ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனையாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே.8) வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவி கார்த்திகா, 598/600 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், பள்ளி ஆசிரியர்களும் மாணவிக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நாமக்கல்: திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு மார்கழி மாதம் மட்டும் மரகத லிங்கம் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. மற்ற மாதங்களில் அதற்குப் பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள். இந்த மரகத லிங்கத்தை தரிசனம் செய்ய காலை 5 மணிக்குள் கோவிலில் இருக்க வேண்டும். SHARE பண்ணுங்க!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 195 பள்ளிகள் உள்ளது. அதில் 12 அரசு பள்ளிகள் உட்பட 70 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 9343 பேரில் 8672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை WAY2NEWSல் தொடர்ந்து பாருங்கள். (ஷேர் பண்ணுங்க)

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (01/05/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்சுமணதாஸ் (9443286911), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – தவமணி (9443736199) ,வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (மே 1) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.60 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.

பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்கள் இங்கு தங்கி இருந்து பெருமாளை தரிசித்ததால் இவ்வூர் பாண்டவர் மங்கலம் என்று அழைக்கப்பட்டது. அதுவே மருவி பாண்டமங்கலம் ஆனது. இங்கு தை மாதத்தில் கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா துவங்கப்பட்டு 7 நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். புரட்டாசி மாதம் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. SHARE IT!
Sorry, no posts matched your criteria.