Namakkal

News April 24, 2024

நாமக்கல்: நீச்சல் பயிற்சி பலர் ஆர்வமுடன் பங்கேற்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் வெயில் தாக்குவதால் மக்கள் இளநீர், நுங்கு, பழச்சாறு, மோர் அருந்தி தங்களை வெப்பத்திலிருந்து காத்து வருகின்றனர்.அது போக மூன்று வேளையும் குளிர்ந்த நீரில் குளித்து வருகின்றனர். இதனிடையே நாமக்கல் ஆட்சியர் வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு அரசாங்கத்திலும் நீச்சல் குளத்தில் கோடைக்கால 3ம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் தொடங்கி உள்ளது பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர்.

News April 24, 2024

நாமக்கல்: மின்னணு இயந்திரங்கள் அறையில் ஆய்வு

image

திருச்செங்கோடு நாமக்கல் சாலையில் அமைந்துள்ள, விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் ,தேர்தல் நடத்தும், அலுவலருமான மருத்துவர் உமா அவர்கள் இன்று பாதுகாப்பு அறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News April 24, 2024

நாமக்கல் கோழிப் பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், தளிகை ஊராட்சியில் உள்ள தனியார் கோழிப் பண்ணையில் பறவை காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். ஆய்வின் போது ஆட்சியர் மரு.ச.உமா உள்ளிட்டோர் மாஸ்க் அணிந்திருந்தனர்.

News April 24, 2024

நாமக்கல்: சிலம்ப பயிற்சி முகாம் 

image

தமிழர்களின் பாரம்பரிய கலையான, சிலம்பக்கலையை ஊக்குவிக்கும் வகையிலும், அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில் நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள கந்தசாமி கண்டர் பள்ளி மைதானத்தில் இன்று முதல் தினமும் காலை 6.30 முதல் 8 மணி வரை மாணவ மாணவியர்களுக்கான சிலம்பம் பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது. நாமக்கல் பாரதமாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

News April 24, 2024

நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.6 குறைவு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.127-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை ரூ.6 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.121 ஆனது. முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.87 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News April 24, 2024

நாமக்கல்:5% சிறப்பு சலுகை

image

நாமக்கல் நகராட்சிக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரித்தொகையை ஏப்ரல்  30-க்குள் செலுத்துவோருக்கு ஐந்து சதவீதம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆணையா் கா.சென்னுகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இணையதளம் வாயிலாக சொத்து வரியை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

நாமக்கல்: எஸ்பி அலுவலகத்தில் தர்ணா

image

பரமத்தி வேலூர் வக்கீல் ராஜகோபால் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் வக்கீல்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் 2 மணி நேரம் போராட்டம் நடைபெற்று வந்தது. எஸ்பி ராஜேஷ் கண்ணன் வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ..இந்நிலையில் சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணை மேற்கொள்ளும் இன்ஸ்பெக்டர் ,எஸ்ஐ ஆகியோர் வரவேண்டும் என்றனர்.

News April 24, 2024

நாமக்கல் மருத்துவர் பிஜேபியில் இணைந்தார்

image

பாரதிய ஜனதாக் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணன் ராஜேந்திரன் ஆகியோர் ஆன்மீகம் மற்றும் ஆலை மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செல்வம் ஏற்பாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் N.P.சத்தியமூர்த்தி முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர் கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

News April 24, 2024

நாமக்கல்: பறவைக் காய்ச்சல் தடுப்பு கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை, கால்நடை மற்றும் பராமரிப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடனான பறவைக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

News April 24, 2024

நாமக்கல்: பறவை காய்ச்சலை தடுக்க குழு அமைப்பு

image

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பறவைக்காய்ச்சல் தடுப்பு பணி மேற்கொள்வது குறித்து கலெக்டர் உமா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கால்நடை மருத்துவர்கள் சுகாதார அலுவலகம் மற்றும் கோழி பணியாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கோழி பண்ணைகளில் பறவை காய்ச்சலுக்கு இருக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் கோழி மட்டும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க வலியுறுத்தப்பட்டன.