India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார் நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஸ்குமார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷாவிற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பேராசிரியர் அன்பழகன் 102வது பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டுவருகிறது. அதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள எம்.பி. ராஜேஷ்குமார் இல்லத்திலும், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்திலும் உள்ள அன்பழகன் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்வளர்ச்சி துறையின் சார்பில் மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்ட அளவில் முதல்நிலை எழுத்துத் தேர்வு 21ஆம் தேதி நடத்தப்பட்டு சிறந்த மதிப்பெண் பெறும் 9 நபர்கள் தெரிவு செய்யப்பட்டு 3 குழுக்களாக இணைந்து இறுதிப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு 94877 76832 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் ஆட்சியர் கூறியுள்ளார்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 570 காசுகளாக நீடித்து வந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 560 காசுகளாக குறைந்துள்ளது.கறிக்கோழி ரூ.93-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.96-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
வெப்படை அருகே தனியார் நூற்பாலையில், பணிபுரிந்துவந்த 2 வட மாநிலத்தவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், அருகில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரியும், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜன் லகூரி, மான்சிங் கக்ராய், தசரத் படிங்க் ஆகிய மூன்று வட மாநில இளைஞர்கள் மது போதையில் துபலேஷ், முன்னா ஆகியோரை கொலை செய்தது தெரியவந்தது. மூவரையும் வெப்படை போலீசார் நேற்று கைதுசெய்தனர்.
நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். மார்கழி மாத நான்காம் நாள் தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் ஆஞ்சநேயர் பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது.
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் கொடுப்பதற்கு நாளை (20/12/2024) கடைசி தேதி ஆகும். எனவே உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
1.நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம்
2.நியாய விலைக் கடையில் ஆட்சியர் ஆய்வு
3.இரயில்வே துறை அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி. மனு
4.மேயரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்
5.எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
இன்று 18.12.2024 டெல்லியில் நடைபெற்ற சந்திப்பில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் V.S.மாதேஸ்வரன் M.P திருச்செங்கோடு கொக்கராயன்பேட்டை பகுதியில் ஒற்றை வழி மேம்பாலம் ஒன்று அனுமதிக்கப்பட்டுள்ளது,ஆனால் தற்போது அது திருத்தப்பட்டு இரட்டை வழி மேம்பாலம் ரயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. எனவே இரட்டை மேம்பாலம் அமைக்க கோரிக்கை மனு அளித்தார்.
Sorry, no posts matched your criteria.