India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பள்ளி மற்றும் கல்லூரில் படிக்கும் மாணவர்கள் மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளது என நூதன முறையில் பணம் திருட்டு தற்சமயம் நடைபெற்று வருகிறது. எனவே பெற்றோர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள், வங்கி இருப்பு அல்லது Google Pay பற்றிய விவரங்களை தங்களுக்கு தெரியாதவர்களிடம் பகிர வேண்டாம் என நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரிவோர். தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். அவ்வாறு பயணம் செய்வோர். குறைந்த கட்டணத்தில் பயணிக்க இங்கு <

பள்ளி மற்றும் கல்லூரில் படிக்கும் மாணவர்கள் மாணவியர்களுக்கு நாமக்கல் மாவட்டம் காவல்துறை சார்பில்; கல்வி உதவித்தொகை வந்துள்ளது என நூதன முறையில் பணம் திருட்டு தற்சமயம் நடைபெற்று வருகிறது. எனவே பெற்றோர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள், வங்கி இருப்பு அல்லது Google Pay பற்றிய விவரங்களை தங்களுக்கு தெரியாதவர்களிடம் பகிர வேண்டாம் என நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லுாரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, அறிவிப்பில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம், 60 முதல் 90 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் கிழக்கு, வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 4 முதல் 6 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இன்று 19 மிமீ, நாளை 28 மிமீ 20ம் தேதி 8 மிமீ, 21ல் 11மிமீ, 22ம் தேதி 28 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாமக்கல்லில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற நாமக்கல்லை சேர்ந்த இளைஞர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல்.

தாத்தயங்கர்பட்டி பில்லா துறையை சேர்ந்த வைரமாணிக்கம், 45. இவர் இரவு, நாமக்கல் சாலையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து விட்டு, டூவீலரில் பொட்டிரெட்டிபட்டி அரசு பள்ளி அருகே சென்ற போது தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதானால், பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு விடுத்துள்ளார். தீபாவளி அதிரடி சலுகை தள்ளுபடி என்ற பெயரில் செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகள், சமூக ஊடக செயலிகள் மூலம் வரும் கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். அவ்வாறு ஏதேனும் குறுஞ்செய்தி அல்லது லிங்க் மூலம் உங்களை தொடர்பு கொண்டால் நீங்கள் உதவிக்கு அழைக்க வேண்டியவை 1930 என்ற என்னை அழைக்கவும்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.17 நாமக்கல்-(தங்கராஜ் – 9498110895), வேலூர் – (சுகுமாரன் -8754002021), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (செல்வராசு -9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக்டோபர்.17) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 18) முதல் முட்டையின் விலை ரூ.5.20 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.