India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வெப்படை, அம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே திருச்செங்கோடு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆத்தூரை சேர்ந்த விஜய் (26). இளையராஜா (24) இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. பின் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், 20-10-2025 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடபடுகிறது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் வழிகாட்டும் நெறிமுறையைப், பின்பற்றி பாதுகாப்பான முறையில் விபத்து மற்றும் மாசற்ற ஒலி குறைந்த பட்டாசுகளை பயன்படுத்துமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு இல்லம் உள்ளது இந்த நினைவு இல்லம் நூலகமாக செயல்பட்டு வருகிறது. அக்டோபர்-19ஆம் தேதி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிறந்த நாளையொட்டி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கவிஞரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். நிகழ்ச்சியில் ஆட்சியர் துர்கா மூர்த்தி பங்கேற்கின்றனர்.

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு பயிற்சியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விமலா, இ.கா.ப., இன்று (18.10.2025) பார்வையிட்டார். அப்போது, காவலர்கள் பணி நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை அவர் வழங்கினார். காவலர்களின் உடல் தகுதி மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.18 நாமக்கல்-(தேசிங்கன் – 8668105073) ,வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (செல்வராஜு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <

நாமக்கல் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே<

நாமக்கல்லில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்படுள்ளது. வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்லவும். அதிகம் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.