India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இன்று காலை 10:30 மணி அளவில் ஆஞ்சநேய பகவானுக்கு பல வித வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் அலங்காரம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நீர்நிலைப் பாதுகாவலர் விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது எனநாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தகவல் தெரிவித்துள்ளார். இந்த விருதிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் “தமிழ்நாடு விருதுகள் (TN Awards)” (http://awards.tn.gov.in) வலைதளம் மூலம் வரும் 02.01.25 முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 17.01.25 எனவும் தெரிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 11ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.80 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது மழை பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ரூ 4.80 ஆகவே நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கவிதை கட்டுரை பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. 21 ஆம் தேதி நாமக்கல் அரசு தெற்கு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 22ஆம் தேதி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
ப.வேலூா் வட்டத்தில் அல்லாள இளைய நாயகா் பிறந்த நாள் விழா ஜன.14-இல் ஜேடா்பாளையம் அணைக்கட்டு பகுதியில் கொண்டாடப்பட உள்ளது. அதனையொட்டி சட்டம்- ஒழுங்கை பராமரிக்கும் வகையில் ஜேடா்பாளையம், ப.வேலூா் காவல் நிலைய சரகத்திற்கு உள்பட்ட கபிலா்மலையில் 3 கடைகள், பாகம்பாளையம், சோழசிராமணி, வடகரையாத்தூா்,ப.வேலூா் நான்கு சாலை சந்திப்பு, பழைய புறவழிச்சாலை, உரம்பு, சிவா தியேட்டர் உள்ளிட்ட 10 மதுகடைகள் மூடப்பட உள்ளது.
கந்தம்பாளையம் எஸ்.கே.வி.வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 420 மாணவ, மாணவிகள் தாங்கள் கற்கும் அறிவியல் பாடத்தில் இருந்து சூத்திரங்கள், வரையறைகள், கருத்துகள் போன்றவைகளை ஒவ்வொருவராக இடைவிடாமல் 10 மணி நேரம் ஒப்பித்து உலகசாதனை படைத்துள்ளனர். எலைட் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் (ம) தமிழன் புக் ஆப் ரெகார்ட் ஆகிய 2 உலக சாதனை நிறுவனங்களின் ஆய்வாளர்கள் 10 மணி நேரம் தொடர்ந்து கண்காணித்தது சான்றிதழ்களை வழங்கினர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 10 மி.மீட்டரும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 25 மி.மீட்டரும், 14-ந் தேதி 45 மி.மீட்டரும், 15-ந் தேதி 34 மி.மீட்டரும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பில்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 86 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 64.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவிற்காக போக்குவரத்து, போக்குவரத்துக் காவல் துறை, காவல் துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், 15.01.2025 – திருவள்ளுவர் தினம் (புதன்கிழமை) மற்றும் 26.01.2025 குடியரசு தினம் (ஞாயிற்றுகிழமை) தினத்தினை முன்னிட்டு மேற்படி இரண்டு நாட்களில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் FL 3 உரிம வளாகங்களை மூடப்பட வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை, அரையநாடு அல்லாள இளைய நாயகர் அறக்கட்டளை சார்பில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பட்டக்காரர் முன்னிலையில் விழா குழுவினர் சார்பாக 2025 தை 1 அன்று நடைபெறும் மாமன்னர் அல்லாள இளைய நாயகரின் அரசு விழா அழைப்பிதழ் அவர்களது இல்லத்தில் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.