India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பள்ளிபாளையம், ஆவரங்காடு பகுதியை சேர்ந்த லட்சுமணன், தினேஷ்குமார் ஆகிய இரு இளைஞர்கள், போதைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக, பள்ளிபாளையம் போலீசார் இளைஞர்களை கைது செய்தனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில், தற்போது இவ்விருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.15) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138), வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (கோவிந்தசாமி- 9498169110), குமாரபாளையம் – (மாதேஸ்வரன்- 9498168949) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர்-15ம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் 5 காசுகள் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.95 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று ரூ.5.90 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில், வாராந்திர கவாத்து இன்று நவம்பர்-15 காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விமலா கவாத்தை ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலிருந்தும் காவலர்கள் முதல், துணை காவல் கண்காணிப்பாளர் வரை ஆயுதப்படை மைதானத்தில் கவாத்தில் பங்கேற்றனர்.

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை (BOI)!
மொத்த பணியிடங்கள்: 115
கல்வித் தகுதி: BE/B.Tech, M.sc, MCA
சம்பளம்: ரூ.64820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: 17.11.2025.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:<

நாமக்கல் மக்களே, “ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வீசும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உதவி மையங்களை தொடர்பு கொள்ள நாமக்கல்- 04286-233901, ராசிபுரம் -04287-222840, திருச்செங்கோடு- 04288-253811, சேந்தமங்கலம் – 6282228034, பரமத்தி வேலூர் – 04268-250099, குமாரபாளையம்- 04288-246256 – ஆகிய இலவச சேவை எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

நாமக்கல் மண்டலத்தில் இன்று (15-11-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) கிலோ ரூ.104- ஆகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ. 106- ஆகவும் நீடித்து வருகிறது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ. 5.90 ஆக விற்பனையாகி வருகின்றது. கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.