India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெறுவதற்கு நாகை மாவட்டத்தை சேர்ந்த தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விளையாட்டு நடுவர்கள் வருகின்ற 21-ஆம் தேதிக்குள், செயலர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரியமேடு, சென்னை என்ற முகவரியில் விண்ணப்பித்திட ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு இஸ்ரோ விண்வெளி கழகம் சார்பில் மாநில அளவிலான கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.இதில் பங்கு பெற்ற மாணவர்களில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் அத்திப் புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவன் யோகேஸ்வரன் கட்டுரை போட்டியில் மாநிலத்தில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றார்.
தமிழ்நாடு மற்றும் அகமதாபாத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் இணைந்து “தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம்” என்ற ஓராண்டு படிப்பு 04.11.2014 அன்று தொடங்கபடவுள்ளதாகவும், இப்படிப்பில் சேர்வதற்கு http/:oneyearcourse.editn.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிடாமல் பாதுகாக்க வேண்டும். அதிக நாட்கள் தண்ணீரில் பயிர்கள் இருந்தால் தழைசத்து மற்றும் துத்தநாக சத்து குறைகள் ஏற்பட்டு இலைகள் தண்டுகள் இளம்மஞ்சள் நிறமாக மாறிவிடும். எனவே 1 கிலோ ஜிங்க் சல்பேட் மற்றும் 2 கிலோ யூரியாவை 200 லிட்டர் நீரில் கலந்து கை தெளிப்பான் மூலம் இலை வழியாக தெளிக்கலாம் என வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நாகூரில் உள்ள தமிழ்நாடு சிட்கோ தொழில் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்பேட்டையில் காலியாக உள்ள தொழில் மனைகள் தொழில் முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. அதன்படி காலியாக உள்ள 13 தொழில் மனைகளில் விருப்பமுள்ள தொழில்முனைவோர் புதிய தொழில் தொடங்க சிட்கோ மேலாளர் செல்வகுமார் 9445006574 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்
நாகை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு எஸ்.பி. அருண் கபிலன் தலைமை ஏற்று பேசினார். அப்போது, மாவட்டத்தில் கஞ்சா, சாராயம், புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பவர்கள் மீதும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரவுடிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
சிக்கலில் நவநீதேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான பணியாளர் குடியிருப்பில் கடந்த சில ஆண்டுகளாக தனி நபர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஒரு வீட்டை கோர்ட்டு உத்தரவுப்படி.நாகை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ராணி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அதன்படி ஆக்கிரமிப்பில் இருந்த இடம் ரூ. 24 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டால் அது குறித்த புகார்களை 1800 2021 989 மற்றும் 14566 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வம்சம் என்ற உதவி மையத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் உடனுக்குடன் செய்து தரப்படும். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 6 துரித நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட சுகாதார அலுவலர் பிரதீப் வாசுதேவ கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
நாகூரில் இருந்து மதுரை வழியாக இயங்கி வந்த கொல்லம் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே வேளாங்கண்ணி அல்லது காரைக்காலில் இருந்து மதுரைக்கு தினசரி இயங்கும் வகையில் புதிய வழித்தடத்தில் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என நாகை ரயில் உபயோகிப்பாளர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.