India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆற்காட்டுத்துறையிலிருந்து ஆறுமுகம் என்பவருடைய படகில் ஆறுமுகம் சிவக்குமார் பரசுராமன் ஆகிய 3 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது கோடியக்கரை நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் வெட்டி, பறித்து கொண்டு மீனவர்களை விரட்டியடித்தனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள 52 திருக்கோவில்களில் இரவு பாதுகாவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியில் சேர விருப்பம் உள்ள 62 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தினை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகேந்திரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆழியூர் கடைத்தெரு, கோவில் கடம்பனூர் சன்னதி தெரு, புதுச்சேரி மயான கொட்டகை ஆகிய இடங்களில் சாராயம் விற்று கொண்டிருந்த கந்தன், மகாதேவன், சிவா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 330 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
தீபாவளி திருநாளை முன்னிட்டு சென்னை கோவை திருப்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் ஆகிய பகுதிகளுக்கு புதியதாக 14,160 பேருந்துகள் இயக்க உள்ளது. அதில் சராசரியாக நாகை -வேளாங்கண்ணி வரை செல்லும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் ஆவாரணி புதுச்சேரியில் மட்டும் மழை இல்லை என்று விவசாயிகள் வருத்தப்பட்டு வந்தனர் அந்த வருத்தத்தை போக்கும் வகையில் இன்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது தற்பொழுது மிக கனமழை பெய்து வருகின்றது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
வேதாரண்யம் வட்டம் கோடியக்கரை மீனவர்கள் வளையில் 3 கிலோ எடை கொண்ட கல்நண்டு சிக்கியது. மீனவர்கள் கல்நண்டை சோதனை செய்ததில் நண்டின் பின்பகுதியில் 8 லட்சம் முட்டைகள் இருப்பது தெரியவந்தது. பின்னர், மீனவர்கள் பிடித்த கல்நண்டு குஞ்சி பொரிப்பதற்காக தற்போது அந்தமானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. வென்டிலேட்டர் வசதியுடன் விமானத்தில் அனுப்பிவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்டத்தில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் நாகை மாவட்ட போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி, புதுச்சேரி, கோவில் கடம்பனூர், கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட கந்தன் (47), மகாதேவன் (35), சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
தமிழக துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 27 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் உள்ளார். அதற்கு வாழ்த்து தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள், பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகூரில் பிரதான சாலையில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தில் 2k கிட்ஸின் கலைஞர் உதயநிதி ஸ்டாலின் என வித்தியாசமாக கட்சியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம், கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி, 1991-ஆம் ஆண்டு தஞ்சையிலிருந்து இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 4 தாலுகாவை உள்ளடக்கிய நாகை மாவட்டத்தில் மொத்தம் 236 வருவாய் கிராமங்கள் உள்ளன. நாகை மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை சுமார் 18 லட்சம் ஆகும். இதில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகமாகும். நாகை மாவட்டம் என்றால் உங்கள் ஞாபகத்திற்கு வருவது என்ன? SHARE NOW!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் அக்டோபர்-20 (இன்று) மற்றும் அக்டோபர்-22 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.