India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை, திருமருகல் வட்டாரத்தில் சம்பா, தாளடி நெற்பயிர் சாகுபடி முடிந்து பின் வயல்களில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பருவம் தவறிய மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளாலும், பூச்சி நோய் தாக்கப்பட்டாலும் விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.956 பிரீமியமாக செலுத்த வேண்டும். இந்த பிரீமியம் தொகை செலுத்த வருகிற மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
ஊரகப் பகுதிகளில் குறுந்தொழில், சிறு தொழில், இயந்திரங்கள் நிறுவுதல் ஆகிய பணிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்/ ஊராட்சிகளின் ஆய்வாளர் அவர்களின் அனுமதி பெற்று தொடங்க வேண்டும். தொழிற்சாலையின் பரப்பளவிற்கு ச. மீ கட்டணம் ரூ 150 நிர்ணயித்தும் தீயணைப்பு துறை அனுமதி, நகர் ஊரகத்துறை, இதர தொடர்புடைய துறைகள் அனுமதி மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு அரசு இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் <
தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்து, அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தேர்தல் நடைமுறைகளை சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு எவ்வாறு மேம்படுத்துவது? என்பது குறித்து ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் ஆலோசனைகளை தெரிவிக்கலாமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இத்தகவலை அரசியல் கட்சியினருக்கு SHARE பண்ணுங்க..
கீழையூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி(24) மற்றும் ராமநாயக்கன் குளத்தெருவைச் சேர்ந்த முகேஷ்குமாா்(28) இருவரும் கடந்த கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, பிரதாபராமபுரம் பகுதியில் மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதனால் ஏற்பட்ட தகராறில், பாலாஜி செங்கற்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இது சம்பந்தமாக கீழையூர் போலீசார் பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த சரவணன், ஜெயபால் ஆகியோரை கைது செய்தனர்.
தாட்கோ மூலம் பி.எஸ்சி, எம்.எஸ்சி நர்சிங்; போஸ்ட் பேசிக் பி.எஸ்சி நர்சிங் மற்றும் பொது செவிலியர் ஆகிய மருத்துவ படிப்புகளில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் சேர <
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <
நாகை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு அனைத்து வகையான கடனுதவிகளும் வழங்கப்படுகிறது. எனவே கடன் பெற தகுந்த ஆவணங்களுடன் தங்களது அருகாமையில் உள்ள வங்கிகளுக்கு சென்று பயன் பெற ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார்.
நாகூரில் பூஜையறையில் விளக்கேற்றி விட்டு கோயிலுக்கு சென்ற போது கூரைவீடு தீப்பிடித்து எரிந்து விபத்து. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் பிரசாத் சத்யா தம்பதியினர் கூரைவீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மாசி மகத்தை முன்னிட்டு சத்யா பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். வந்து பார்க்கையில் வீட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாகை ஏ.டி.எம். மகளிர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் 3 மணிவரை நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 10000க்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.