India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகையிலிருந்து இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்துக்கு 5 நாட்களாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் போக்குவரத்து இருந்து வந்த நிலையில் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் வரும் 8ஆம் தேதி முதல் வாரத்திற்கு செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 5 நாட்கள் கப்பல் இயக்கப்படும்.
கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நேற்று மாலை காப்பு கட்டுதலுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் இரவு முருகப்பெருமான் தங்க மஞ்சத்தில் எழுந்தருளி வீதியுலா காட்சி நடைபெற்றது. இன்றிரவு 7 மணிக்கு பவள ஆட்டுக்கிடா வாகனத்திலும் நாளை 4ஆம் தேதி இரவு 7 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் முருகன் பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பட்டாசு வெடித்ததில் 16 பேருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 30 மற்றும் 31 ஆம் தேதி அன்று 11 ஆண்கள் 5 பெண்கள் என 16 பேருக்கு தீகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் பட்டாசு வெடித்ததில் ஒரு வீட்டில் தீப்பொறி பட்டு எரிந்து சேதமானது. ஒரு வைக்கோல் போர் தீ பிடித்து எரிந்து சேதமாகியுள்ளது.
நாகை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் 11 ஆண்கள் 5 பெண்கள் என 16 பேர் காயம் அடைந்தனர். ஒரு குடிசை வீடு மற்றும் மாட்டு கொட்டகை எரிந்து நாசமாகியுள்ளது.இந்த நிலையில், அனுமதித்த நேரத்திற்கு பின் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக வெளிப்பாளையம், திட்டச்சேரி, நாகூர் ஆகிய காவல் நிலையங்களில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினத்தில் 14 மி.மீ.யும், திருப்பூண்டியில் 27.60 மி.மீ.யும், வேளாங்கண்ணியில் 13.80 மி.மீ., தலைஞாயிறில் 23.60 மி.மீ. வேதாரண்யம் 12 மி.மீ. கோடியக்கரை 4.2 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து வாரத்தில் ஐந்து நாட்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்த நிலையில் வரும் 8ஆம் தேதி முதல் வெள்ளிக் கிழமைகளிலும் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட உள்ளது என சிவகங்கை கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.
நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் காஞ்சனா தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு மற்றும் அலுவலர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை பகுதியில் இயங்கிய ஆம்னி பஸ்களில் இன்று இரவு அதிரடி சோதனை நடத்தினர். இதில் வரி செலுத்தாமை, செல்போன் பேசியவாறு பஸ் ஒட்டியது, பக்கவாட்டு விவரம் மற்றும் உரிய ஆவணம் இல்லாமல் இயங்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 31 பஸ்களுக்கு ரூ.57,500 அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் 2025-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்.30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 6 கோடியே 27 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதியாக கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது. இதன் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,73,230 பேர் ஆகும். SHARE NOW!
நாகை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 5ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட விவசாயிகளுக்கு மின்சார பம்ப் செட்டுகளை இயக்கும் தானியங்கி ரிமோட் ஆப்ரேட் கருவிகள் ஆதிதிராவிடர்களுக்கு 50% மற்றும் இதர வகுப்பினருக்கு 40% மானியத்திலும் வழங்கப்பட உள்ளது.
இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண் விரிவாக்க மைய உதவி பொறியாளர்களிடம் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.