India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் சிக்கல் நவநீதேசுவரசுவாமி திருக்கோயில் சிங்காரவேலர் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை நடைபெற உள்ளதால், நாளை புதன்கிழமை நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். அதனை ஈடு செய்ய வரும் 23 ம் தேதி பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான முகாம் நவ.5, 6 ஆம் தேதிகளில் நாகை அரசு மருத்துவ கல்லூரியிலும், 7, 8, 9-ல் வேதாரண்யம் மருத்துவமனை, 12, 13, 14 ஆம் தேதிகளில் திருமருகல் சுகாதார நிலையம், 16, 17 ல் தேவூர் சுகாதார நிலையம், 20ஆம் தேதி திருப்பூண்டி சுகாதார நிலையத்திலும், 21 ஆம் தேதி திருக்குவளை மருத்துவமனை, 22ஆம் தேதி நீர்முளை சுகாதார நிலையத்தில் நடக்கிறது. ஷேர் செய்யவும்
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான முகாம் நவ.5, 6-ஆம் தேதிகளில் நாகை அரசு மருத்துவ கல்லூரியிலும், 7, 8, 9-இல் வேதாரண்யம் மருத்துவமனை, 12, 13, 14 ஆம் தேதிகளில் திருமருகல் சுகாதார நிலையம், 15 ல் கீழ்வேளுர் மருத்துவமனை,, 16, 17 ல் தேவூர் சுகாதார நிலையம், 20ந் தேதி திருப்பூண்டி சுகாதார நிலையத்திலும், 21 ந்தேதி திருக்குவளை மருத்துவமனை, 22ந் தேதி நீர்முளை சுகாதார நிலையத்தில் நடக்கிறது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 143 மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாகை மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி வாட்ஸ்ஆப் எண் மற்றும் P Akash என்ற பெயரில் போலி பேஸ்புக் ஐடி உள்ளிட்ட வெவ்வேறு செயலிகள் மூலமாக ஏதேனும் பணம் கேட்டு குறுஞ்செய்தி வந்தால் அதனை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், அவ்வாறு குறுஞ்செய்தி வரும் பட்சத்தில் நாகை சைபர் க்ரைம் 94981 62795, கணினி வழி குற்றப்பிரிவு எண் 1930 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்குமாறு = ஆட்சியர் ஆகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
பிரதாப ராமபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (36) ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 1 ஆம் தேதி இவர் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி தடுத்த போது ராஜேந்திரன் சிறுமியை செங்கல்லால் தாக்கியுள்ளார். இதனை தட்டி கேட்ட சிறுமியின் தாயையும் தாக்கியுள்ளார். புகாரின் பேரில் நாகை அனைத்து மகளிர் போலீசார் ராஜேந்திரனை போக்சோவில் கைது செய்தார்.
நாகபட்டினம் விவசாயிகள், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி பெற விண்ணப்பிக்கலாம். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் வேளாண்மை உட்கட்டமைப்பு, நிதி பெற நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த, விவசாயிகள் agriinfra.dac.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என நாகபட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு 9788598064 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
வேளாங்கண்ணியில் அக்.5ஆம் தேதி காலை 9 மணிக்கு பேரிடர் மீட்பு குழு கடலோர பாதுகாப்பு குழு வருவாய் மற்றும் தீயணைப்பு காவல் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பங்கேற்கும் சுனாமி பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நடைபெறுகிறது. இது சுனாமி தொடர்பான ஒத்திகை என்பதால் பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகையிலிருந்து இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்துக்கு 5 நாட்களாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் போக்குவரத்து இருந்து வந்த நிலையில் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் வரும் 8ஆம் தேதி முதல் வாரத்திற்கு செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 5 நாட்கள் கப்பல் இயக்கப்படும்.
கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நேற்று மாலை காப்பு கட்டுதலுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் இரவு முருகப்பெருமான் தங்க மஞ்சத்தில் எழுந்தருளி வீதியுலா காட்சி நடைபெற்றது. இன்றிரவு 7 மணிக்கு பவள ஆட்டுக்கிடா வாகனத்திலும் நாளை 4ஆம் தேதி இரவு 7 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் முருகன் பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
Sorry, no posts matched your criteria.