Nagapattinam

News June 4, 2024

நாகை: சிபிஐ வேட்பாளர் முன்னிலை

image

நாகை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8:00 மணி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிந்த நிலையில் தபால் வாக்குகளில் சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ் தொடர்ந்து முன்னிலை வைத்து வருகிறார். அதனைத் தொடர்ந்து முதல் சுற்று வாக்குகள் எண்ணும் பணியில் சுமார் 8400 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.

News June 4, 2024

நாகை: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, நாகை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 4, 2024

நாகையில் மகுடம் சூட்டுவது யார்?

image

2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதியில் மொத்தம் 71.55 % வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் செல்வராஜூம், அதிமுக சார்பில் சுர்சித் சங்கர், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம் ரமேஷூம் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.

News June 3, 2024

உங்கள் தொகுதி யாருக்கு?

image

2019இல் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் திமுக – கம்யூனிஸ்ட் கூட்டணியில் போட்டியிட்ட எம். செல்வராஜ் 21.18% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட தாழை ம.சரவணன், 211,353 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் செல்வராஜ், அதிமுக சார்பில் சுர்சித் சங்கரும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்?

News June 3, 2024

நாகை:  காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம்

image

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நாகையில் இன்று நடைபெற்றது. புத்தூர் ஈசிஆர் சாலைக்கு அருகில் உள்ள சோலை மஹாலில் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடகாவிடம் உரிய தண்ணீரை பெற்று தர வலியுறுத்தியும் அதற்காக நீதி கேட்டு பூம்புகாரில் இருந்து மேட்டூர் அணை வரை நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

News June 3, 2024

நாகை: அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!

image

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி கீழையூர் மேற்கு ஒன்றியம் எட்டுக்குடி ஊராட்சியில் இருந்து திமுகவை சேர்ந்த கண்ணதாசன், பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த பரமசிவம், சிபிஎம் நடராஜன் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நாகை மாவட்ட செயலாளர் ஓ.எஸ்மணியன் தலைமையில் தங்களை அதிமுக இணைத்துக் கொண்டனர்.

News June 3, 2024

திருக்குவளை: கருணாநிதி சிலைக்கு மரியாதை!

image

நாகை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா திமுக சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது. திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த இல்லத்தில் மாவட்ட திமுக செயலாளர் கவுதமன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ வேதரத்தினம், தலைமை செயற்குழு உறுப்பினர் கோவிந்தராசன், கீழையூர் ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

News June 3, 2024

நாகையில் மழை பெய்ய வாய்ப்பு!

image

சென்னை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று(ஜூன் 3) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, அதாவது காலை 10 மணி வரை நாகப்பட்டினம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 2, 2024

திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

image

திருநங்கைகளுக்கான நல வாரிய அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம், முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை எளிதில் பெறும் வகையில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் 21ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில், மாவட்டத்தின் அனைத்து திருநங்கைகளும் பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் கேட்டு கொண்டுள்ளார்.

News June 2, 2024

நாகையில் போராட்டம் – விவசாயிகள் அறிவிப்பு

image

நாகை மாவட்டம் வேதாரணியம் தாலுக்கா தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சரியாக வாய்க்கால்களை தூர்வாராமல் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தூர்வாரியத்தை கண்டித்து விவசாயிகள் வருகிற 6ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். உடனடியாக ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூர் வராவிட்டால் சாலை மறியலில் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெறும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர் .