India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மக்களின் தேவைக்காக திருமருகல் நீர் உந்தும் நிலையத்தில் இருந்து நாகை நீரேற்றும் நிலையத்திற்கு தினமும் 22.50 மில்லியன் லிட்டர் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் குழாயில் இருந்து முறைகேடாக இணைப்பு ஏற்படுத்தி தினமும் 1 லட்சம் லிட்டர் குடிநீரை நாகை தனியார் பொறியியல் கல்லூரி திருடியது ஆட்சியரின் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
நாகை மாவட்டத்தில் TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு நாகை ஏ.டி.எம் மகளிர் கல்லூரி வளாகத்தில் 9ந் தேதி சனிக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகலில் நடக்கிறது. தேர்வர்கள் அன்று காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வந்திட வேண்டும். கைப்பேசி மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் ஏதும் அனுமதிக்கப்பட மாட்டாது என ஆட்சியர் ஆகாஷ் இன்று தெரிவித்து உள்ளார்.
தெற்கு பொய்கைநல்லூர் வீரன் குடிகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் முன்விரோதம் காரணமாக அக்-30ஆம் தேதி இரவு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த கொலையாளிகள் மகாகுமார், ஆகாஷ், சேதுபதி ஆகிய 3 இளைஞர்களை நேற்று மாலை கைது செய்தனர்.
நாகை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் சம்பா நெற்பயிருக்கு 4ஆம் தேதி வரை 14,410 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். வரும் 15ஆம் தேதி காப்பீடு செய்ய கடைசி நாள் என்பதாலும் கடைசி நாளில் காப்பீடு செய்ய முற்படும் போது இணையத்தில் கோளாறு ஏற்படலாம். எனவே விவசாயிகள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக பயிர் காப்பீடு செய்ய ஆட்சியர் ஆகாஷ் அறிவுறுத்தி உள்ளார்.
வேளாங்கண்ணி பூக்கார தெரு பகுதியில் கிரி பிரசாத் மனைவி லதா என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஓராண்டாக ஏலச்சீட்டு தொகையை வழங்காமல் 3 கோடி ரூபாய் அளவிற்கு ஏமாற்றியுள்ளதாக 15க்கும் மேற்பட்டவர்கள் நாகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்தில் நவம்பர்-07 (வியாழன்), 08 (வெள்ளி) , 09 (சனி), 10 (ஞாயிறு), 12 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மேற்கூறியுள்ள நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம் வரும் நவம்பர் 09, 10, 23 மற்றும் 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை மாலை 5.45 மணிக்குள் (நவ.7) இந்த <
நாகை அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதான் மந்திரி தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் வருகின்ற 11 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. ஐ.டி.ஐ. தொழில்நுட்ப பயிற்சி முடித்தவர்கள் இதில் பங்கேற்று பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு நாளை 6 ஆம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சக்திவேல் வாங்கும் நிகழ்வு இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. அப்போது முருகப்பெருமானுக்கு முகத்தில் வியர்வை சிந்தும் அற்புத காட்சி நடைபெறும். இதனை காண்பதற்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முருகப்பக்தர்கள் சிக்கல் கோவிலில் திரண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.