India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவிக்க மண்டலம் வாரியாக புதிய வாட்ஸ் அப் எண்களை தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது.அதன்படி நாகை மாவட்டம் வேதாரண்யம், கீழ்வேளூர் திருக்குவளை, நாகப்பட்டினம் ஆகிய வட்டங்களை சேர்ந்த மின் நுகர்வோர் தங்களது புகார்களை 9486111912 என்ற எண்ணிற்கு தெரிவித்து உரிய தீர்வு காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தொடர் மழை பெய்ததால் 3,000 மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. தெற்கு வங்க கடல் மத்திய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
நாகையில் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடிந்த பயிற்சியாளர்களுக்கு, தொழில்பழகுனர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் வருகிற 11ஆம் தேதி நடைபெறுகிறது என நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார், பல்வேறு தொழில் பிரிவுகளில் தொழில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் தொழிற்பழகுர் பயிற்சிக்கு தேர்வு செய்யஉள்ளனர்.
நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா டிசம்பர் 2 தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது. பல மதங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கும் இந்த விழாவிற்கான அழைப்பிதழை தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முகமது காஜி உசைன் , நாகூர் சித்திக் சேவை குழும தர்ம அறக்கட்டளை நிறுவனர் சித்திக் ஆகியோர் வேளாங்கண்ணி மாதா பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளாரிடம் வழங்கி கந்தூரி விழாவில் கலந்து கொள்ள கேட்டு கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நவ.16,17 மற்றும் 23,24 ஆகிய தேதிகளில் புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்க மற்றும் வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் முகாம் நடைபெற உள்ளது. மேலும் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை தெரிந்து கொள்ள 1950 என்ற எண்னை தொடர்பு கொள்ளலாம்.
இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்கும் மீனவ சமுதாய இளைஞர்களுக்கு 3 மாத காலம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவு, தங்குமிடம், பயிற்சி கையேடு மற்றும் ரூ.3000 வழங்கப்படும் எனவே தகுதியான இளைஞர்கள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நாகை மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பாளர் விஜய கார்த்திக் ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்கும் மீனவ சமுதாய இளைஞர்களுக்கு 3 மாத காலம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவு, தங்குமிடம், பயிற்சி கையேடு மற்றும் ரூ.3000 வழங்கப்படும் எனவே தகுதியான இளைஞர்கள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நாகை மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பாளர் விஜய கார்த்திக் ராஜ் தெரிவித்துள்ளார்.
எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரும் எக்ஸ்பிரஸ் ரயில் நாகூர் கந்தூரி விழாவை ஒட்டி 9, 11, 16 ஆகிய தேதிகளில் முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் மட்டும் நின்று செல்லும். மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயில் 10, 12.17 ஆகிய தேதிகளில் முத்துப்பேட்டையில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
திருக்குவளை ஏரித்திடல் பகுதியைச் சேர்ந்த நாகூரான் மனைவி மணியம்மாள் (65). இவர்களது மகன் சுரேஷ் (33). இவர், மது குடிக்க பணம் கேட்டு தந்தை நாகூரானிடன் அண்மையில் தகராறு செய்துள்ளார். இதை மணியம்மாள் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திர மடைந்த சுரேஷ், மணியம்மாளை தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மக்களின் தேவைக்காக திருமருகல் நீர் உந்தும் நிலையத்தில் இருந்து நாகை நீரேற்றும் நிலையத்திற்கு தினமும் 22.50 மில்லியன் லிட்டர் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் குழாயில் இருந்து முறைகேடாக இணைப்பு ஏற்படுத்தி தினமும் 1 லட்சம் லிட்டர் குடிநீரை நாகை தனியார் பொறியியல் கல்லூரி திருடியது ஆட்சியரின் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
Sorry, no posts matched your criteria.