Nagapattinam

News November 11, 2024

நாகை எஸ்பி அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், எஸ்பி அருண் கபிலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. 

News November 11, 2024

நாகை ஆயுதபடை மைதானத்தில் ரோந்து வாகனங்களை எஸ்பி ஆய்வு

image

நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையில் ரோந்து பணிக்காக காவல்துறையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளனவா என்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.அருண் கபிலன் நேரில் ஆய்வு செய்தார்.

News November 11, 2024

நாகை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மதிப்பீட்டுக்குழு நாகப்பட்டினம் மாவட்டத்தில் 13.11.2024 அன்று ஆய்வு பயணம் மேற்கொள்ளவுள்ளது. தலைவர் காந்திராஜன் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், 18 உறுப்பினர்களை கொண்ட குழு வேளாண் மற்றும் உழவர் நலன் போன்ற 10 துறைகளை ஆய்வு செய்யவுள்ளது என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.

News November 10, 2024

நாகை: புகையிலைப் பொருள் விற்பனை செய்த கடைக்கு சீல்

image

நாகப்பட்டினம், வெளிப்பாளையம், பச்சை பிள்ளை குளம் பகுதியில் இயங்கிவரும் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் வெளிப்பாளையம் உதவி ஆய்வாளர் கோகுல்ராஜ் ஆய்வு இன்று மேற்கொண்டனர். அங்கு உள்ள கடையில் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, பின்னர் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

News November 10, 2024

நாகை: தகராறில் அரிவாள் வெட்டு 5 பேர் கைது

image

அனந்தநல்லூரை சேர்ந்த சிவவேல் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது இந் நிலையில் சிவவேல் வீட்டில் நடந்த நிகழ்விற்கு பத்திரிகை வைக்கவில்லை என சாலையில் நின்று தகாத வார்தையால் திட்டியுள்ளார். வீண் தகராறில் ஈடுபடுகிறீர்கள் என சிவவேல் கேட்டுள்ளார்.இதில் இரு தரப்பிற்கும் மோதலில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது இதுதொடர்பாக 5பேரை திட்டச்சேரி போலீசார்கைது செய்துள்ளனர

News November 10, 2024

வெறிச்சோடிய வேளாங்கண்ணி

image

நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வார விடுமுறையை முன்னிட்டு அதிக அளவில் வேளாங்கண்ணிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. கடலிலும் குறைந்த அளவிலானோர் குளித்து மகிழும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த வியாபாரிகள் சற்று கலக்கமடைந்துள்ளனர்.

News November 10, 2024

நாகைக்கு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு வருகை

image

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டுக் குழு வரும் 13ஆம் தேதி நாகை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. 18 உறுப்பினர்களை கொண்ட மதிப்பீட்டுக் குழு அதன் தலைவர் காந்திராஜன் தலைமையில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், இந்து சமய அறநிலையத் துறை, வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு உள்ளிட்ட 10 துறைகளை ஆய்வு செய்ய உள்ளனர் என்று ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆட்சியர் தகவல்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பம் இல்லை எனில் உரிமத்தை விட்டு கொடுப்பது தொடர்பாக தமிழ்நாடு பொதுவிநியோக திட்ட வலைதளத்தின் (www.tnpds.gov.in) மூலமாக குடும்ப அட்டையினை பொருளில்லா அட்டையாக மாற்றி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

2.30 லட்சம் ஆடுகளுக்கு நோய் தடுப்பூசி

image

நாகை மாவட்டத்தில் வருகிற 11ந் தேதி தொடங்கி 30 நாட்களுக்கு ஆட்டு கொல்லி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. மாவட்டத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு இந்த ஊசி போட திட்டமிடப்பட்டுள்ளது. ஆடுகள் வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும் போது 4 மாதத்திற்கு குறைவான மற்றும் சினை ஆடுகள் நீங்கலாக அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போடுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

News November 9, 2024

நாகையில் குடிநீர் திருடிய தனியார் கல்லூரிக்கு ரூ.2 கோடி அபராதம்

image

நாகையில் ராட்சச குடிநீர் குழாய்யை ஓட்டை போட்டு அதிலிருந்து குழாய் இணைத்து முறைகேடாக தண்ணீர் திருடிய நாகை ஈ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சியர் ரூ.2 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பொதுமக்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நீரை சட்ட விரோதமாக கடந்த 3 மாதங்களாக திருடியது ஆட்சியரின் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.