India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை, லேசான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு திருவனந்தபுரம்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து 28ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் 4ஆம் தேதி ஆகிய நாட்களில் பிற்பகல் 3.25 மணிக்கு புறப்படும். மறு வழித்தடத்தில் வேளாங்கண்ணியில் இருந்து வரும் 22, 29 மற்றும் அடுத்த மாதம் 5ஆம் தேதி ஆகிய நாட்களில் இரவு 7.10 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கீழ்வேளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இதில் பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உறுப்பினர்கள் வழங்கினர்.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வரும் 27 முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை 1,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர், பட்டுக்கோட்டை இருந்து பேருந்துகள் இயக்கம்.
நாடு முழுவதும் தபால் துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் MERIT பட்டியல் வெளியாகியுள்ளது. நாகை மாவட்டத்தில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 73 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியானது. முழு விவரங்களை https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
நாகை கோட்டூர் ஊராட்சியில், மக்கள் நேர்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். இதனை தொடர்ந்து, நிகழ்வில் பேசிய அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களின் பலன் சரியான நபர்களை சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும். அப்படி சென்றடைந்தால் தான் திட்டம் வெற்றி பெற்றதாக அர்த்தம்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. மேலும், பிரசித்திப் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தம்புராஜ் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைக்கிறார். இதைத் தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி தற்போது நாகை மாவட்டத்தில் மாலை 5 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகை மாவட்ட வருவாய் அலுவலர் பேபி இன்று ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிறப்பு சான்று பெறப்பட்டு சான்றிதழ்களில் பெயர் சேர்க்கப்படாத குழந்தைகளின் பெயர்களை சேர்க்க 31.12.2024 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், வேதாரண்யம், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.