Nagapattinam

News August 29, 2024

நாகையில் 29, 30 விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகஸ்ட் 29, 30 சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது இடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது 45 வயதுக்கு உட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

News August 29, 2024

நாகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 12-ஆம் வகுப்பு, ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளை ஆக.29 & 30 ஆகிய தேதிகளிலும், 12-ஆம் வகுப்பு, கலை, அறிவியல் உள்ளிட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு செப்.06 & 07 ஆகிய இரண்டு தேதிகளில் தனியார்துறை வேலைவாயப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 29, 2024

வேளாங்கண்ணி திருவிழா: 2 தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறை

image

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த திருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள நாகை மற்றும் கீழ்வேளூர் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஏற்கனவே ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி இரு தாலுகாவிற்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

News August 29, 2024

வேளாங்கண்ணியில் 3,000 காவலர்கள் பாதுகாப்பு

image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா இன்று (ஆக.29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் ஏராளமானோர் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர். எனவே பொது மக்களின் பாதுகாப்பு கருதி 20 குழுக்களாக 3,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

தமிழ் புதல்வன் திட்டத்தில் 3,119 மாணவர்கள் பயன்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தில் சுமார் 3,119 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்: நாகை ஆட்சியர்

image

நாகை மாவட்டத்தில் 07.09.2024 அன்று கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதூர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் சிலைகளை வைக்கவும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள வழிகாட்டுதலின்படி விதிமுறைகளை பின்பற்றி சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என நாகை ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News August 28, 2024

நாகைக்கு புதிய பேருந்து நிலையம் : ஆட்சியர் ஆய்வு

image

நாகப்பட்டினம் நகராட்சி சார்பில் செல்லூர் பகுதியில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக புறநகர் பேருந்து நிலையம் அமையவுள்ளது. பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் பா.ஆகாஷ் இன்று ஆய்வு செய்தார். நகராட்சி தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர், உதவி செயற்பொறியாளர், நகர் மன்ற உறுப்பினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

News August 28, 2024

நாகையில் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை தொடக்கம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழகம் முழுவதும் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திக்கான சாவியினை மாவட்ட ஆட்சியர் .ப.ஆகாஷ் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் இன்று (28.08.2024) ஊழியர்களிடம் வழங்கினர்.

News August 28, 2024

வேளாங்கண்ணி திருவிழா: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வேளாங்கண்ணி புனித ஆரோக்ய மாதா பேராலய திருவிழாவையொட்டி இன்று முதல் செப்.9ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை, திருச்சி, மதுரை, திண்டுக்கல் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பயணிகள் வசதிக்காக பேருந்து நிலையங்களில் சேவை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

News August 27, 2024

பயனாளிகளிடம் கருத்து கேட்ட மாவட்ட ஆட்சியர்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தமிழக அரசின் நலத்திட்டங்களான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், நான் முதல்வன் கல்லூரி மாணவர்களுக்கான நிதி வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டம் மூலம் பெறப்பட்ட பயனாளிகளிடம் தொலைபேசி மூலம் கருத்துக்களை இன்று கேட்டறிந்தார்.