Nagapattinam

News September 4, 2024

மக்கள் குறைகளை கேட்டறிந்த நாகை எஸ்.பி.

image

நாகை மாவட்ட எஸ்.பி. வாராந்திர மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமை தாங்கி பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 8 மனுக்களை பெற்று விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை 8428103090 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

News September 4, 2024

நாகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2024-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி பள்ளி&கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் செப்டம்பர் 10ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நாகையில் உள்ள ஆண்டவர் செவிலியர் கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் அறிவித்துள்ளார்.

News September 4, 2024

நாகை பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

image

ஓசூர் டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் சார்பில் 12ம் மற்றும் கலை அறிவியல் முடித்து மின்னணு உற்பத்தி துறையில் ஒராண்டு அனுபவமுள்ள பெண்களுக்கு வரும் 6, 7 தேதிகளில் நாகை மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நேர்முக மற்றும் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. உணவு விடுதி இலவசம். மாதம் ரூ.19,629 ஊதியமாக வழங்கப்படும். தகுதியானவர்கள் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன்பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

News September 4, 2024

நாகையில் வேளாண் கருவிகள் விழிப்புணர்வு முகாம்

image

நாகை அவுரி திடலில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று காலை நடைபெற்றது. தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து வேளாண் கருவிகள் பராமரிப்பு குறித்த கையேட்டினை விவசாயிகளுக்கு வழங்கினார்.

News September 4, 2024

நாகையில் 6 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணிபுரியும் 6 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருது பெறுகின்றனர். ஜி. சாந்தி-திருக்கண்ணங்குடி பள்ளி, சி. இளவரசி-தேசிய தொடக்கப்பள்ளி, நாகப்பட்டினம், ந. குமார்-ஊ.ஒ.ந.பள்ளி, கோகூர், மூ. ஞானசேகர்-அ.மே.நி.பள்ளி, கீழ்வேளூர், டி. மகேந்திரன்-அ.மே.நி.பள்ளி, தாணிக்கோட்டகம், கே. எஸ். மீனாட்சி-அஞ்சுவட்டத்தம்மன் பள்ளி, கீழ்வேளூர்.

News September 4, 2024

விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் மாதம் 6000/- ரூபாய் ஓய்வூதிய திட்டத்திற்கு www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான தகுதிகள் மற்றும் விவரங்கள் நாகப்பட்டினம் நகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News September 4, 2024

விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் மாதம் 6000/- ரூபாய் ஓய்வூதிய திட்டத்திற்கு www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான தகுதிகள் மற்றும் விவரங்கள் நாகப்பட்டினம் நகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News September 3, 2024

நாகை ஆட்சியர் திடீர் ஆய்வு

image

நாகை செல்லூர் பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுற்றுச் சுவர் மற்றும் கட்டிடங்கள் தரமாக உள்ளதா என நேரில் ஆய்வு செய்தார். அப்போது கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

News September 3, 2024

நாகை-இலங்கை கப்பலில் பயணிகள் வரத்து அதிகரிப்பு

image

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் கப்பல் சேவையானது தொடங்கப்பட்டது. ‘சிவகங்கை’ என பெயரிடப்பட்ட இக்கப்பல் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வேளாங்கண்ணி திருவிழா காரணமாக இலங்கையிலிருந்து நாகை வரும் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. வரும் 7, 8-ஆகிய தேதிகளில் பயணிகளின் எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 3, 2024

நாகை எஸ்பிக்கு அழைப்பு விடுத்த விநாயகர் குழு

image

நாகப்பட்டினத்தில் விநாயக சதுர்த்தி முன்னிட்டு வரும் ஏழாம் தேதி 32 அடி உயரம் உள்ள விஸ்வரூப அத்தி விநாயகர் ஊர்வலம் நாகையிலிருந்து நாகூர் வரை நடைபெற உள்ளது. விழாவில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென விஸ்வரூப விநாயகர் குழு நிர்வாகிகள் எஸ்பியிடம் இன்று அழைப்பிதழ் வழங்கினர்.