Nagapattinam

News November 14, 2024

பாஜக மாவட்ட தலைவர் மறைவு – அஞ்சலி

image

நாகையில் பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயன் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது சொந்த ஊரான செம்போடையில் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் நடக்கிறது.  இதனிடையே அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயபால் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

News November 14, 2024

நாகை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது காலை 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காலை 10 மணி வரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை மக்களே உங்கள் பகுதியில் மழை பெய்து இருந்தால் கீழே கமெண்ட் செய்யவும்.

News November 13, 2024

மாணவர் விடுதி அடிப்படை வசதிகள் ஆய்வு

image

தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கோவி செழியன் இன்று நாகை மாவட்டம் வந்திருந்தார். அப்போது திருக்குவளை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி மாணவர் விடுதிக்கு சென்ற அவர் மாணவர்களுக்கான சமையலறை, கழிவறை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உடனிருந்தார்.

News November 13, 2024

நாகை மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

image

வங்கக்கடலில் உருவாக்கியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து, நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காலை 10 மணி வரை நாகை மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW.

News November 12, 2024

நாகை மீனவர்களுக்கு 20ஆம் தேதி வரை காவல்

image

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்வநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று காலை கைது செய்தது. முல்லைத்தீவு கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் 12 மீனவர்களையும் வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பருத்தித் துறை ஊர்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News November 12, 2024

நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேர் கைது

image

நாகையில் இருந்து அக்கரை பேட்டை டாட்டா நகரை சேர்ந்த செல்வநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகிலிருந்து 12 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.

News November 12, 2024

தாட்கோ மூலம் போட்டி தேர்வுக்கான பயிற்சி

image

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களுக்கு பட்டய கணக்காளர் இடைநிலை, நிறுவன செயலாளர் இடைநிலை மற்றும் செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் இடைநிலை ஆகிய போட்டி தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் ஒரு வருட இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்த விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளரை தொடர்பு கொள்ள ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

News November 11, 2024

நாகை மாவட்டத்திற்கு தொடர் கனமழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் நவ.12 (நாளை) முதல் நவ.15 (வெள்ளிக்கிழமை) வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. SHARE NOW!

News November 11, 2024

நாகை கலெக்டர் தலைமையில் குறைதீர் கூட்டம்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் இன்று (11.11.2024) மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் அரசு துறையைச் சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

News November 11, 2024

நாகை எஸ்பி அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், எஸ்பி அருண் கபிலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.