India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய கடற்கரையில் ‘நம்ம நாகை, நம்ம இசை’ எனும் இசை நிகழ்ச்சி 23ஆம் தேதி நடக்கிறது. இதில் முதல் பரிசு ரூ.10,000; இரண்டாம் பரிசு ரூ.7,500; மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்பட உள்ளது. இதில் இசை திறமை கொண்டவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசு வெல்லலாம். மேலும் விவரங்களுக்கு 8281431707 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு இன்று (பிப்.11) தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இன்று யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிகை விடுத்துள்ளார்.
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் ஆழியூர் ஊராட்சியில் ரோட்டரி சங்கம் மூலம் மாபெரும் ரத்த தான முகாம் ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலயம் அருகில் நடத்தப்படுகிறது. இதில் தஞ்சாவூர் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் மருத்துவ குழு இணைந்து இரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. இதில் குருதி கொடை வழங்கும் அனைவரையும் வருகைத் தருமாறு கீழ்வேளூர் ரோட்டரி சங்கம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 1330 திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற்றது. இதில் வேதாரண்யத்தைச் சேர்ந்த திருமலைச்செல்வன் மஞ்சுளா தம்பதியரின் மகள் ஸ்ரீ நிஷா முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இந்த மாணவியை தமிழ் தென்றல் கல்வியியல் கழக நிறுவனர் புயல் குமார் பாராட்டி பரிசு வழங்கினார். பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாபட்டினத்தில் சாகுல் அமீது என்பவர் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்டி வருகிறார். இந்த நிலையில் இன்று கட்டுமான ஈடுபட்டிருந்த தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி முருகானந்தம் என்பவர் கட்டிடத்தில் உட்பக்க படியிலிருந்து தவறி கீழே விழுந்து முருகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கடந்த ஆண்டு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பின்னர் காலநிலை மாற்றம், நிர்வாக சீர்திருத்தம், போதுமான பயணிகள் இல்லாததால் கப்பல் இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், நிறுத்தப்பட்ட சிவகங்கை எனும் அந்த கப்பல் 12 ஆம் தேதி முதல் மீண்டும் நாகையில் இருந்து இலங்கைக்கு தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாயாரோஹன உடனுறை ஸ்ரீ நீலாயதாச்சி அம்மன் கோயிலில் இன்று (பிப்.10) குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை மற்றும் திருமருகல் ஒன்றியங்களில் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். எனவே பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் மது விலக்கு குற்றத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 104 வாகனங்கள் வெளிப்பாளையத்தில் 12ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன. ஏலம் எடுக்க வருபவர்கள் அன்றைய தினம் காலை 8-9 மணிக்குள் தங்கள் முகவரியினை அடையாள அட்டையுடன் வந்து ஏலம் விடும் குழுவிடம் பதிவு செய்ய வேண்டும். ஏலம் எடுத்தவுடன் முழு தொகையும் செலுத்த வேண்டும் என்று மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாகை மாவட்ட பள்ளி கல்வி துறை மற்றும் மாவட்ட கல்வி தன் முனைப்பு திட்டத்தின் கீழ் நாகை மாவட்ட நிர்வாகம் PRJR பேட்மிண்டன் அகாடமியுடன் இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு பேட்மிண்டன் பயிற்சி திட்டத்தை தொடங்கி உள்ளது. இப்பயிற்சியில் 14 வயதுக்குட்பட்ட 24 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் திறன்களை மேம்படுத்த மாதந்தோறும் போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வள்ளலார் நினைவு தினம் வரும் பிப்.11-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசின் உத்தரவுப்படி நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களுக்கு அன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், இதனை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.