Nagapattinam

News September 13, 2024

வேளாங்கண்ணியில் அமைச்சர் கீதா ஜீவன்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று வேளாங்கண்ணிக்கு திடீர் வருகை தந்தார். அவரை திமுக மாவட்ட செயலாளர் கௌதமன், கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரிய சார்லி உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக நேரில் சென்று சந்தித்தனர்.

News September 13, 2024

நாகையில் கடும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு

image

நாகை மாவட்டத்தில் போதை பொருட்களை உபயோகிப்பது மற்றும் விற்பனை செய்வதை கட்டுப்படுத்துவது தொடா்பாக ‘போதைப் பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு’ கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஆகாஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்பொழுது, அனைத்துத் துறை அலுவலா்களும் போதைப் பொருள்கள் தொடா்பாக ஆய்வுகள் மேற்கொண்டு, காவல் துறைக்கு கடும் நடவடிக்கை மேற்கொள்ள ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனறாா்.

News September 12, 2024

நாகையில் 5882 பேர் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத உள்ளனர்

image

நாகை மாவட்டத்தில் வரும் 14ஆம் தேதி காலை டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குருப் 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது. 19 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வில் 18 மாற்றுத் திறனாளிகள் உட்பட 5882 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோருக்கு தேர்வு எழுதிட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் ஆகாஷ் இன்று தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

நாகையில் மாற்றுதிறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

image

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் ஒரு பிரிவாக மாற்றுத்திறனாளி ஆடவர் மற்றும் பெண்களுக்கு தடகளம், கபாடி, அடாப்டட் வாலிபால், இறகு பந்து, எறிபந்து, வீல் சேர், டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகள் நாளை 13ந்தேதி காலை நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதே போல் பள்ளி மாணவியருக்கான வலை கோல் பந்து போட்டியும் நாளை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்து உள்ளார்.

News September 12, 2024

நாகை: கூட்டுறவு வங்கிகளில் ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனை

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் மின்னணு பண பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே அனைத்து விவசாயிகளும் மானிய விலையில் கூட்டுறவு வங்கிகளில் இடுபொருட்கள் வாங்கும் போது இந்த புதிய வசதியை உபயோகப்படுத்தி பயன் அடைய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

News September 12, 2024

நாகை கடலோர பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு

image

நாகை மாவட்ட மீனவ இளைஞர் கடலோர பாதுகாப்பு ஊர்க்காவல் படையில் தற்போது காலியாக உள்ள 16 பணியிடங்களுக்கு (ஆண்கள்) 23.09.2024 அன்று நாகை ஆயுதப்படை மைதானத்தில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு தகுதியாக 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல், நற்குணம் மற்றும் நல்ல உடற்தகுதி உடையவராக இருத்தல் வேண்டும் என நாகை மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.

News September 11, 2024

நாகை கலெக்டர் திடீர் ஆய்வு

image

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் ஆயக்காரன்புலம்-3ஆம் சேத்தி சிங்கான்குத்தகை கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று வீடு கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News September 11, 2024

நாகை: புதிய உதவி செயற்பொறியாளர் பதவி ஏற்பு

image

நன்னிலம் காவிரி வடிநில உபகோட்டம் நீர்வளத்துறை‌ அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக ‌ரெ.சுப்ரமணியன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பாசன பிரிவில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் பதவி உயர்வு அடைந்து நன்னிலம் காவிரி வடிநில உபகோட்டம் செயற்பொறியாளராக நேற்று பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்று கொண்ட சுப்பிரமணியனுக்கு கடைமடைப்பகுதி விவசாயிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

News September 11, 2024

நாகை பள்ளி மாணவியருக்கு கிரிக்கெட் போட்டி

image

முதலமைச்சர் பரிசு கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டி நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவியருக்கான கிரிக்கெட் போட்டிகள் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் விளையாட்டு மைதானத்தில் நாளை 12-ந் தேதி நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கான கைப்பந்து மற்றும் வளைகோல் பந்து போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை நடக்கிறது என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 11, 2024

நாகையில் நேற்று 100 டிகிரி வெயில்

image

நாகையில் பருவமழை தொடங்கிய பிறகு பரவலாக மழை பெய்தது. இதனால் கோடை வெயில் சற்று தனித்து காணப்பட்டது. தொடர்ச்சியாக வளிமண்டல மேலடுக்கு, கீழடுக்க சுழற்சி, கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு ஆகியவை காரணமாக நாகையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் கடந்த இரண்டு வாரங்களாக நாகை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று நாகையில் 100.4 டிகிரி வெப்பம் பதிவானது.