India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வேலைவாய்ப்பு பிரிவு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் 20.09.2024 அன்று காலை 10 மணிக்கு சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் கலந்துக்கொள்ளலாம் என ஆட்சியர் ப.ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
நாகை அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட தலைமை தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம் தினமும் நடைபெற்றுவருகிறது. தற்போது நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் சிறப்பு முகாம் ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் நடைபெறுகிறது. இதில் புதிய ஆதார் திருத்தம் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது என நாகை கோட்ட கண்காணிப்பாளர் ஜோசப்ராஜ் தெரிவித்துள்ளார்.
நாகை நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் சோபனா தேவி தலைமையில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இருந்து சிவில் வழக்குகள், விபத்து, குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட 2,534 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 1,022 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, அதன் மூலம் ரூ.4 கோடி 71 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
டெல்டா பகுதி விவசாயிகள் நெல், பயறு, உளுந்து, பருத்தி போன்றவை மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர் இதற்கு மாற்று பயிராக கத்தரி, புடலை, வெண்டை, பாகல், மிளகாய், தக்காளி போன்ற தோட்டக் கலை காய்கறி வகைகளை சாகுபடி செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம் என திருமருகல் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் மேற்கு வங்கம் வழியாக அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகரக்கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் வங்கதேச கடற்கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் தொலைதூரத்தில் புயல் உருவாகியுள்ளது என்பதை குறிக்கும் நாகை, காரைக்கால் உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பரிசு கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் ஒரு பகுதியாக நாளை 15 மற்றும் 16ஆம் தேதிகளில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம். கல்லூரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் மைதானத்தில் 15ஆம் தேதி நடத்தப்படுகிறது என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்கள், நேற்றிரவு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். நாகை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 19 மீனவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி விசைப்படகுகளில், கடலில் மீன் பிடித்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் மதுபானக் கடைகள் அனைத்தும் செப்.17-ஆம் தேதி மூடவேண்டும் என ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீலாது நபியை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் செப்.17-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகளும் மூடவேண்டும்,யாரும் மது விற்பனை செய்யக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டம் முழுவதும் 17.09.2024 அன்று ஒருநாள் மட்டும் அனைத்து மதுபானக் கடைகளையும் மதுக்கூடங்களையம் மூடிட அரசு உத்தரவிட்டுள்ளது. மதுபான விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நாகை மாவட்டத்தில் நடந்து வருகின்றன. இதில் ஒரு பகுதியாக 15 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தடகளம், இறகு பந்து, கபாடி, சிலம்பம், கேரம், கால்பந்து, கையுந்து பந்து ஆகிய போட்டிகள் நாளை 14ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கின்றன என்றும், போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.