Nagapattinam

News September 20, 2024

கல்லார்: பொதுமக்களை சந்திக்கும் நாகை கலெக்டர்

image

வடக்கு பொய்கைநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லார் கிராமத்தில் ஏராளமான பயனாளிகள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். இவர்களிடம் நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ப.ஆகாஷ், இன்று காலை 10 மணிக்கு நேரில் கலந்துரையாட உள்ளார். பயனாளிகள் பங்கேற்குமாறு ஊராட்சி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News September 19, 2024

முன்னாள் அமைச்சர் நாகை கலெக்டருக்கு மனு

image

நாகை மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனுவில், வேதாரண்யம் பகுதியில் பசுங்கன்றுகளுக்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை போர்க்கால அடிப்படையில் கால்நடை துறையின் மூலம் விரைந்து நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

News September 19, 2024

நாகை அருகே கடலில் விழுந்த மீனவர் பலி

image

வேதாரண்யம் தாலுகா, வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மீனவர் மாரியப்பன் (53). இவர் நேற்று முன்தினம் புஷ்பவனத்திற்கு கிழக்கே சுமார் 10 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்துள்ளார். அப்போது எஞ்சின் புரொபெல்லரில் சிக்கி கழுத்து மற்றும் தோள்பட்டையில் வெட்டு விழுந்ததில் மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 18, 2024

நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

கீழ்வேளூர் வட்டம், திருப்பூண்டி கிழக்கு என்கிற காமேஸ்வரம் கிராமத்தில் தொழிற்பேட்டை அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் இன்று (செப்.18) ஆய்வு செய்தார். அப்போது வட்டாசியர் ரமேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News September 18, 2024

பொதுமக்களிடம் 17 மனுக்களை பெற்ற நாகை எஸ்பி.

image

நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து 17 மனுக்களை பெற்றார்கள். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். பின்னர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு பெறப்பட்ட மனுக்கள் மீதான வழக்கு நிலுவை மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.

News September 17, 2024

நாகையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வேலைவாய்ப்பு பிரிவு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் செப்.20 அன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்குபெற உள்ளன என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 17, 2024

129 மனுக்களை பெற்றுக்கொண்ட நாகை கலெக்டர்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 129 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட  துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டார்.

News September 17, 2024

நாகை வரும் ஆளுநர் ஆர் என்.ரவி

image

வேதாரண்யம் அகஸ்தியன்பள்ளி உப்பு சத்தியாகிரக நினைவிட நிகழ்ச்சி, மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நாகை மாவட்டத்திற்கு இன்று (செப்.17) வருகை தருகிறார். திருச்சிக்கு விமானம் மூலம் வரும் அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகை மாவட்டத்தை வந்தடைவார். இதற்காக நாகை மாவட்டத்தில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News September 17, 2024

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி

image

நாகூர் அருகே மேல வாஞ்சூரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (42). பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு அப்பகுதியை சேர்ந்த நபர்கள் சிலர், பன்றிகளை இங்கு வளர்க்க கூடாது என தொந்தரவு அளித்து வந்துள்ளனர். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ராஜேஸ்வரியும் அவரது மகள்களான பவதாரணி (21), பவித்ரா (20), கோகிலவாணி (18) ஆகியோர் நேற்று நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News September 17, 2024

நாகை உணவகங்களில் சுகாதாரத்துறை திடீர் ஆய்வு

image

நாகை நகராட்சிக்கு உட்பட்ட வெளிப்பாளையம், காடம்பாடி, நிலா கீழவீதி, மார்க்கெட் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாகை நகராட்சி ‌உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி. அன்பழகன் தலைமையில் உணவகங்களில் முறையாக சுகாதாரம் கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது.