India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டத்தில் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கபடவுள்ளது. செப்டம்பர் மாத இறுதிக்குள் இப்படிப்பில் சேர்வதற்கான நேர்காணல் நடத்தப்பட்டு அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. மேலும் தகவலுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்- 6382436094 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மாவட்டங்களின் வளர்ச்சி பணிகளை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நாகை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றியவர். தஞ்சையில் மாவட்ட ஆட்சியராகவும் பணி புரிந்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பாக நாகை மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி மற்றும் மாரத்தான் ஓட்ட போட்டிகள், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் போட்டிகள் நடத்தப்படும் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று 192வது ஆய்வை நாகப்பட்டிணம் தொகுதியில் மேற்கொண்டார். நாகப்பட்டிணத்தில் அமைந்துள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள்,
வினாத்தாள் பாதுகாப்பு மையம், புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் உதவித்தொகை, குடும்ப அட்டை மாற்றம், வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 783 மனுக்களை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பெற்றுக்கொண்டார். மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் அறிவுறுத்தினார்.
கீழ்வேளுர் அருகே இலுப்பூரில் ரூ.62.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து இலுப்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை ஆட்சியர் ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் எம்.எல்.ஏ, நாகை மாலி ஆத்மா தலைவர் கோவிந்தராசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
நாகை அன்னை சத்யா அரசு காப்பகத்தில் உள்ள 5 மாணவிகளிடம், அதே இல்லத்தில் பணிபுரிந்து வந்த மனநல ஆலோசகர் தவறாக பார்ப்பதாக மாணவிகள், காப்பக கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். மேலும் காப்பக கண்காணிப்பாளரின் புகாரின் பேரில், மனநல ஆலோசகர் கைது செய்யப்பட்டார். மேலும் காப்பகத்தில் புகார் தெரிவித்த குழந்தைகளுக்கு ஆறுதல்கூற 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட கலெக்–டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் வேதாரண்யம் லயன்ஸ் சங்கம் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நாளை 22ஆம் தேதி காலை 8 மணிக்கு வேதாரண்யம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெறுகிறது. இதில் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவச பரிசோதனையும் முற்றிலும் இலவச அறுவை சிகிச்சையும் அளிக்கப்படுகிறது என லயன் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வேளாங்கண்ணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த பாண்டிச்சேரியை சேர்ந்தவர் மோனிஷா (26). கடந்த 2 ம் தேதி தூக்க மாத்திரை சாப்பிட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், 4ம் தேதி இரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயன்றார். அவரை திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து வேளாங்கண்ணி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கீழ்வேளூர் அருகே இலுப்பூர் சத்திரம் கடைவீதியில் ஆண் நபர்(65) மயங்கி நிலையில் கிடப்பதாக கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த மருத்துவர்கள் மயங்கிய நிலையில் இருந்த நபரை பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.