Nagapattinam

News February 24, 2025

சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் படுகாயம்: டிரைவர் கைது

image

நாகை மாவட்டம் பாலக்காடு தெற்கு தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜேந்திரன் (55), வேலையை முடித்து விட்டு சைக்கிளில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவரது பின்புறமாக மணல் ஏற்றி வந்த லாரி அவர் ஓட்டிச்சென்ற சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் படுகாயமடைந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார், லாரி டிரைவர் சந்திரசேகரனை (27) கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்தனர்.

News February 23, 2025

‘நம்ம நாகை நம்ம இசை’ நிகழ்ச்சி ஸ்பாட் பதிவு 

image

நாகை புதிய கடற்கரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நம்ம நாகை நம்ம இசை நிகழ்ச்சி இன்று 23.2.25 நடைபெற உள்ளது. இசைக்கலைஞர்கள் வளமான இசையை திறமையை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. இந்நிகழ்வின் கலந்து கொள்ளும் கலைஞர்களுக்கு ஸ்பாட் பதிவு மாலை 4:30 மணி முதல் நடைபெறும் முதல் 20 பதிவுகளுக்கு மட்டுமே. பாடகர்கள் மற்றும் வாத்திய கலைஞர்கள் இருவரும் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News February 22, 2025

குழந்தைகள் நலனில் நாகை ஆட்சியர்

image

குழந்தை தொழிலாளர்கள், குழந்தை திருமணம், வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகள், ஆதரவின்றி தெருக்களில் சுற்றி திரியும் குழந்தைகள், தங்கும் இடம் தேவைப்படும் குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் உள்ளிட்ட குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உடனடியாக 24 மணி நேரமும் இயங்கும் குழந்தைகள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 1098 ல் அழைக்குமாறு ஆட்சியர் ஆகாஷ் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News February 22, 2025

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கும் முறை

image

பசுமை சாம்பியன் விருது விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வலைத்தளத்தில் www.tnpcb.gov. in பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 15 க்குள் விண்ணப்பிக்கலாம் மேலும் கூடுதல் தகவலுக்கு தேவைப்படுபவர்கள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நாகப்பட்டினம் அவர்களை அணுகலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்கள்.

News February 22, 2025

2024ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருது

image

தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த 100 நபர்களுக்கு ரூ. 1,00,000வீதம் பணமும் வழங்க உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள் இவற்றிற்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 22, 2025

குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர் நியமனம்

image

நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட உள்ளது. ஒரு ஆண் மற்றும் 2 சமூக பணி உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 7.3 25 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இயக்குனர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண் 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை கெல்லீஸ் சென்னை 600010 இந்த முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்

News February 21, 2025

நாகை: மஞ்சப்பை 2025 விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருது 2025க்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் https://nagapattinam.nic. in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ப ஆகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

News February 21, 2025

நாளை முதல் இலங்கை பயணம் செல்லலாம்

image

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு சென்று வந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து காலநிலை மாற்றம், நிர்வாக சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு குறைக்கப்பட்ட இருவழி பயண கட்டணம் உள்ளிட்ட சலுகைகளுடன் கப்பல் போக்குவரத்து நாளை 22ந் தேதி முதல் தொடங்குகிறது.

News February 21, 2025

நாகையில் 12 இடங்களில் முதல்வர் மருந்தகம்

image

ஏழை எளிய மக்கள் தங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை குறைந்த விலைக்கு பெற்று பயன் அடையும் வகையில் மாநிலம் முழுவதும் முதல்வரின் மருந்தகம் திறக்கப்படுகிறது. அந்த வகையில் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், கருப்பம் புலம், கத்தரி புலம், நாகூர் மெயின்ரோடு உள்ளிட்ட 12 இடங்களில் முதல்வரின் மருந்தகம் அமைக்கப்பட உள்ளதாக ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News February 20, 2025

தடுப்பணை கட்டும் பணிகள் துவக்கம் ஆட்சியர் அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சியில்விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயிர்களுக்கு சீரான முறையில் தண்ணீர் வழங்குவதற்கு வெட்டாற்றில் தடுப்பணை கட்டும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் நாளை (21.02.2025) காலை 9:45 மணி அளவில் அடிக்கல் நாட்ட உள்ளார்.இதனை மக்கள் செய்தி தொடர்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!