India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில் தூய்மை பணி இன்று நடைப்பெற்றது. இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் தலைமை தாங்கி கடற்கரை தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தமிழ் ஒளி, மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, நகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வாக்காளர் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
நாகை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம். ரமேஷ் களமிறக்கப்பட்டுள்ளார். திருவாரூர், சித்தமல்லியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி எஸ்.ஜி முருகையனின் மகனான எஸ்.ஜி.எம்.ரமேஷ், 2022ஆம் ஆண்டு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இதனையடுத்து பொதுக்கூட்டம், போராட்டத்திற்கு ஆட்களை திரட்டுவது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த இவரது செல்வாக்கை அறிந்த பாஜக தற்போது இவரை களமிறக்கியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலக பிரிவில் மக்களவைத் தேர்தலில் பணிபுரியும் வாக்குச்சாவடி பணியாளர்களை கணினி மூலம் பிரித்தெடுத்தலுக்கான (Randomization) முதல்கட்ட நிகழ்வு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி உள்ளார்.
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 4ம் கட்ட பட்டியல் சற்றுமுன் வெளியானது. இதில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் எஸ்ஜிஎம். ரமேஷ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 14 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் போட்டியிடும் சுர்ஜித் சங்கர் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதாபேராலய பகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் ஒன்றிய செயலாளர்கள் வேதையன் , பாலை. செல்வராஜ், நகர செயலாளர் சாம்சங், தங்கக் கதிரவன் நகர பொருளாளர் இளையதாஸ் பங்கேற்றனர்.
நாகை மக்களவைத் தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக சுர்ஜித் சங்கரை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளனர். இவர் எம்எஸ்டபிள்யூ, பிஎச்.டி படித்துள்ளார். இவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்த நிலையில், அக்கட்சியில் இருந்து விலகி கடந்த மாதம் அதிமுகவில் இணைந்தனர். தற்போது நாகை மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகப்பட்டினம் தேர்தல் செலவின பார்வையாளர் ஹிரிஷிகேஷ் ஹேமந்த் பட்கி , மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், ஆகியோர் தலைமையில் தேர்தல் செலவினங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் ரங்ஜித் சிங், எஸ்பி ஹர் சிங் ஆகியோர் உள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளனர்.
நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட். கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் நேற்று நாகை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, சி.பி.எம். மாவட்ட செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது நாகை எம்.பி.செல்வராசு, திருத்துறைபூண்டி எம்எல்ஏ மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்திய பாராளுமன்ற தேர்தல் தேர்தல் அறிவிப்பு கடந்த 16.03.2024 அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்திட வகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் குறுஞ்செய்தி மூலமாகவோ சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ உண்மைக்கு புறம்பான செய்தியை எழுத்து வடிவிலோ, காட்சி வடிவிலோ பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட எஸ்.பி எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.