India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 354 கிலோ கஞ்சா போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, இதுதொடர்பாக 14 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாகை மாவட்டத்தில் கஞ்சா கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டு மது மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கஞ்சா, மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் எச்சரித்துள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிக்கு ரூ.3,500 மதிப்பீல் காதொலிக் கருவி மற்றும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.8,900 மதிப்பீட்டில் சக்கர நாற்காலி என மொத்தம் 2 பயனாளிகளுக்கு ரூ.12,400 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் இன்று வழங்கினார்.
நாகை அவுரித்திடலில் வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, வேளாண் இயந்திரங்கள பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் நடைபெறவுள்ளது. இம்முகானது வருகிற (ஆக.13) அன்று நடைபெறுமென என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்
நாகை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பில் மாவட்ட காவல் அலுவலகத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.
TNPSC குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் <
நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை சட்டவிரோதமாக குட்கா, பான்மசாலா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 3015 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று ஒரே நாளில் 3 கோயில்களில் திருட்டு சம்பம் நடைபெற்றுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இதில், தேத்தாகுடி பாலடி வீரன் கோயில், கற்பக விநாயகர் கோயில், செட்டி தெரு முத்து மாரியம்மன் கோயில் என மூன்று கோயில்களில் நேற்று இரவு திருடர்களால் உண்டியல் உடைந்த்து திருடப்பட்டுள்ளது. மேலும் வேதாரணியத்தில் கடந்த 1 மாத காலமாக கோயில் திருட்டு சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025 ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (ஆக.12) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இம்முகாமில், நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 18 உதவியாளர், எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இந்த <
Sorry, no posts matched your criteria.