India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டத்தில் 100 % வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் மற்றும் நேர்மையான முறையில் வாக்கு செலுத்துதலை முன்னெடுத்தும் ” என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. 100 மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
நாகை மக்களவைத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளராக கார்த்திகா அறிவிக்கப்பட்டு பல நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் இன்று தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ்சிடம் வழங்கினார். இந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், அகஸ்டின், அற்புதராஜ் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டத்தில் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நாகை பேருந்து வளாகத்தில் நடைப்பெற்றது.
இதில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில், கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் மற்றும் போலீஸ் சூப்ரண்ட் ஹர்சிங் ஆகியோர் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜானிடாம் வர்கிஷ் முன்னிலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியின் ஜீ.சுர்சித் சங்கர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதிமுக அவைத்தலைவர் ஜீவானந்தம்,
அதிமுக நகர செயலாளர் தங்க கதிரவன், தேமுதிக மாவட்ட செயலாளர் பிரபாகரன், எஸ்டிபிஐ, திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் அஜிஸ் உடன் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) அதிமுக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கீழையூரை அடுத்த ஈசனூர் கட்டளை மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ஆரோக்கியசாமி(54). இவரது சகோதரரான சந்தியாகு(45). இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்த நிலையில், அந்த ஊரில் நடந்த துக்க நிகழ்வு இறுதி ஊர்வலத்தில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு சந்தியாகுவை, ஆரோக்கியசாமி மண்வெட்டி கொண்டு சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து ஆரோக்கியசாமியை போலீசார் கைது செய்தனர்
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, நாகப்பட்டினத்தில் மு.கார்த்திகா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகை மீன்வள பல்கலைகழகத்துக்கு ஜெயலலிதா பெயர் வைக்கும் பரிந்துரையை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். மீன்வள பல்கலைகழகத்துக்கு ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக ஆளுநர் அனுப்பிய இந்த பரிந்துரையை நிராகரிப்பதாக அரசுக்கு குடியரசுத் தலைவர் கடிதம் எழுத்தியுள்ளார்.
நாகை மாவட்டம் சாமாந்தான்பேட்டையில் உள்ள மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் நாகப்பட்டினம்(தனி) மக்களவைத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில் தூய்மை பணி இன்று நடைப்பெற்றது. இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் தலைமை தாங்கி கடற்கரை தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தமிழ் ஒளி, மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, நகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வாக்காளர் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.