Nagapattinam

News May 18, 2024

பயணிகள் கப்பல் சேவை தேதியில் மீண்டும் மாற்றம்

image

நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை சிவகங்கை என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் சேவை மே 13 முதல் துவங்குவதாக அறிவிப்பு வெளியாகி அதன் பின்னர் 2 முறை தேதி மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் மே 19ஆம் தேதி கப்பல் சேவை இயங்கும் என எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் மறுதேதி அறிவிக்கப்படாமல் கப்பல் போக்குவரத்து சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News May 17, 2024

நாகை: மூன்று நாட்களுக்கு சூறைக்காற்று

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு (மே.17- 20) பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 17, 2024

நாகை: மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 17) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

News May 16, 2024

இலங்கை மீனவர்கள் 14 பேர் ஐந்து படகுடன் கைது

image

இந்திய கடல் எல்லை பரப்பில் மீன்பிடித்த இலங்கை பருத்தித் துறை பகுதியைச் சேர்ந்த 14 மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் இன்று கைது செய்யப்பட்டனர். வேதாரண்யம் அருகே இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி துர்காவதி என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது இந்திய எல்லைக்குள்
ஐந்து படகு மூலம் கடல் அட்டைகளைப் பிடித்த இலங்கை மீனவர்களை கண்டு அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தது.

News May 16, 2024

ஐ.டி.ஐ.யில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கு ஜூன் 7ஆம் தேதி வரை மாணவர்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். இதற்காக அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், நாகை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பேபி தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

ரேஷன் கடைகளில் பாமாயில் தட்டுப்பாடு

image

நாகை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த ஒரு மாதமாக பாமாயில் விற்பது இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளி சந்தையில் அதிக விலை கொடுத்து பாமாயில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டெண்டர் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாமாயில் விநியோகத்தில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

News May 16, 2024

நாகை: விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் ஆய்வு

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் வரும் 25 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட உள்ளன. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நாட்டுப் படகுகளும் ஜூன் 10 ஆம் தேதி மீன்வளத்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட உள்ளன. எனவே படகு உரிமையாளர்கள் படகின் பதிவுச் சான்று, மின்பிடி உரிமம் உள்ளிட்டவைகளை ஆய்வு குழுவினரிடம் காட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு) பேபி நேற்று(மே 15) தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

நாகை – இலங்கை கப்பல் சேவை! மீண்டும் தேதி மாற்றம்

image

நாகை – இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஏற்கனவே மே 17 ஆம் தேதி துவங்கும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அதன் தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டு மே 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த நபர்கள் கட்டணத்தை திரும்ப பெற விரும்பினால் customercare@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

News May 16, 2024

நாகையில் லேசான கடல் சீற்றம்!

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வரும் நிலையில், மழை தீவிரமடைந்து இன்று(மே 15) அதிகாலை முதல் தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால் நாகை கடலோர கிராமங்களில் வழக்கத்தை விட சற்று அதிகமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பருவமாற்றம் காரணமாகவே இந்த லேசான கடல் சீற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், யாரும் பயப்பட வேண்டாம் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

News May 16, 2024

நாகையில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 16) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!