India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டிணம் மாவட்டத்திற்கு இன்று (மே.23) காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் ஹர்சிங் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து 11 மனுக்களை பெற்றார்கள். பெறப்பட்ட மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். உங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்க எஸ் பி யுடன் பேசுங்கள் 8428103090 எண்ணில் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 1465 பேருக்கு ரூபாய் 98 லட்சத்து 72 ஆயிரத்து 725 மதிப்பீட்டில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகிக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தினால் சாலை விபத்தில் ஏற்படும் உயிர் இழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
நாகை அடுத்த நாகூர் நூல்கடைத் தெருவைச் சேர்ந்த தாவூது பாத்திமா நாச்சியார் வீட்டில் கடந்த 8 ஆம் தேதி காணாமல்போன 32 சவரன் தங்க நகைகள் இன்று கண்டுப்பிடிக்கப்பட்டது. நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஜெகபர் சாதிக் கைது செய்யப்பட்டு அவர் திருடிச் சென்ற தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அமிர்தராஜா தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் ராமலிங்கம், மேற்கு நகர தலைவர் உதயசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாகை, வேளாங்கண்ணி அருகே சீராவட்டம் பகுதியில் வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. வேளாங்கண்ணியில் ஆன்மிக்ச் சுற்றுலாவை முடித்துவிட்டு திரும்பிய போது வயலில் கவிழ்ந்ததில் 17 பேர் காயம் அடைந்தனர். சம்பவயிடத்திற்கு வந்த போலீசார், இவ்விபத்து குறித்து விசாரனை செய்து வருகின்றனர். இந்தவிபத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை நாகை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (மே.18) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.