Nagapattinam

News May 31, 2024

எட்டுக்குடி கோவில் கலசங்களில் தங்கமுலாம்: கோயில் மறுப்பு

image

எட்டுக்குடி முருகன் கோயில் கோபுரத்திலுள்ள கலசங்களுக்கு சுமார் 1000 கிராம் அளவிற்கு தங்க முலாம் பூசப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இக்கோவிலில் உள்ள 8 கோபுரங்களுக்கு 8 கிராம் வீதம் 64 கிராம் மட்டுமே தங்கம் மூலம் பூசப்பட்டதாகவும் , வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் கோயில் செயல் அலுவலர் கவியரசு தெரிவித்துள்ளார்.

News May 30, 2024

நாகப்பட்டினம் நாகை துறைமுகம் சிறப்பு!

image

நாகப்பட்டினத்தில் துறைமுகம் இடைக்கால சோழர் காலத்தில் இந்த துறைமுகம் முக்கியாக இருந்தது. நாகப்பட்டினம் மற்றும் நாகூர் துறைமுகங்கள் குறித்து 16 நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. 1660இல் இருந்து டச்சுக் காரர்களிடமிருந்த இது, 1781இல் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். தரங்கம்பாடி மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் சேர்க்கப்பட்ட பின் இந்த துறைமுகம் சரிவை சந்தித்தது.

News May 30, 2024

ஜூன் மாதத்திற்கான பொருட்கள் இறக்கும் பணி தீவிரம்

image

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் உள்ள நியாய விலை கடைகளுக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய அரிசி, பருப்பு ஆயில் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பகுதியாக இன்று காலையிலேயே வேளாங்கண்ணி பகுதியில் உள்ள அரசு நியாய விலைக் கடைக்கு பணியாளர்கள் பொருட்களை இறக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

News May 29, 2024

புகார் மனுக்களை பெற்ற நாகை எஸ்பி

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத் தீர்ப்பு முகாம் நடைப்பெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பங்கேற்று பொது மக்களிடம் 17 புகார் மனுக்களை பெற்றார். புகார் மனுக்கள் மீது உரிய விசாரனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரர்களுக்கு உறுதி அளித்தார். காவல்துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

News May 29, 2024

மறு கட்டமைப்பை பார்த்து ரசித்த அதிமுக நகரச் செயலாளர்.

image

நாகை பழைய பேருந்து நிலையம் அருகே டச்சு காரர்களால் கட்டுப்பட்ட 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய பேதுரு ஆலயம் பழமை மாறாமல் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக அதிமுக நாகை நகரச் செயலாளரும், வழக்கறிஞருமான தங்க கதிரவன் பங்கேற்று மறுகட்டமைப்பை பார்த்து ரசித்தார்.

News May 29, 2024

நாகையில் 10 நாட்கள் இலவச பயிற்சி

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) இணைந்து நடத்திய மகளிர் குழு உறுப்பினர்களுக்கான 10 நாள் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. கீழ்வேளூர் ஒன்றியம், சாட்டியக்குடி கிராம சேவை மைய கட்டிடத்தில் நடந்த வகுப்பினை மகளிர் திட்ட இயக்குநர் முருகேசன் நேற்று தொடங்கி வைத்து அப்பளம், ஊறுகாய் மற்றும் மசாலா பொடி தயாரித்து லாபம் பெறுவது பற்றி விளக்கினார்

News May 29, 2024

இடம் பெயர்ந்த செம்பரி ஆடு மேய்ப்போர்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் எந்த ஆண்டில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஆட்டுகிடாய் போடுபவர்கள் குடும்பத்தோடு வந்துள்ளனர். குறிப்பாக திருக்குவளை, வலிவலம், இறையான்குடி, சிங்கமங்கலம் , கிள்ளுக்குடி, கடலாடிகுடி , அய்யடிமங்கலம் , கீரங்குடி, சாட்டியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் குடும்பத்தோடு இடம் பெயர்ந்து வயல்களில் குடில் அமைத்து தங்கியுள்ளனர்.

News May 28, 2024

27 பேருக்கு ரூ.9,25,507 காசோலை வழங்கிய நாகை எஸ்பி

image

நாகை மாவட்ட காவல்துறையில் பணி காலத்தின் போது உயிர்நீத்த காவல்துறையினரின் குடும்பத்தாருக்கும், மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மருத்துவ செலவிற்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி ஹர்ஷ் சிங் சேமநல நிதியில் இருந்து பெறப்பட்டு சுமார் ரூ.9,25,507 காசோலையை 27 பயணிகளுக்கு இன்று வழங்கினார்.

News May 27, 2024

நாகைக்கு புகழ் சேர்க்கும் நாகூர் தர்கா!

image

நாகப்பட்டினத்தில், நாகூர் தர்கா அல்லது நாகூர் ஆண்டவர் தர்கா என்றழைக்கப்படும் புகழ்பெற்ற பழமையான தர்கா அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் புனித தலமாக இவ்விடத்திற்கு பலதரப்பட்ட மக்களும் வருகை புரிவதே இதன் சிறப்பாக உள்ளது. இதன் கட்டடக்கலை தமிழ் இஸ்லாமியர்களின் கட்டடக்கலையில் அமைந்துள்ளது. இங்கு ஷாகுல் ஹமீது என்பவரின் கல்லறை அமைந்துள்ளது. இங்கு மத நல்லிணக்கம் மேம்படுத்தும் தலமாக இருந்து வருகிறது.

News May 27, 2024

நாகைக்கு புகழ் சேர்க்கும் நாகூர் தர்கா!

image

நாகப்பட்டினத்தில், நாகூர் தர்கா அல்லது நாகூர் ஆண்டவர் தர்கா என்றழைக்கப்படும் புகழ்பெற்ற பழமையான தர்கா அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் புனித தலமாக இவ்விடத்திற்கு பலதரப்பட்ட மக்களும் வருகை புரிவதே இதன் சிறப்பாக உள்ளது. இதன் கட்டடக்கலை தமிழ் இஸ்லாமியர்களின் கட்டடக்கலையில் அமைந்துள்ளது. இங்கு ஷாகுல் ஹமீது என்பவரின் கல்லறை அமைந்துள்ளது. இங்கு மத நல்லிணக்கம் மேம்படுத்தும் தலமாக இருந்து வருகிறது.

error: Content is protected !!