India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் காரணமாக தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால் வருகின்ற 10ம் தேதி முதல் வழக்கம் போல் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7மணி வரை) நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகையில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அக்கட்சிகளில் இருந்து விலகி, விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். நாகை நாணயக்காரர் தெருவில் உள்ள SCS,GMP திருமண மண்டபத்தில் மாவட்டச் செயலாளர் சுகுமாறன் முன்னிலையில்
நடைபெற்ற நிகழ்வில், ஏராளமான இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலருக்கு சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், தவெக மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில், திருப்பூர், நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுப்பராயன் , செல்வராஜ் ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் வஹிதா நிஜாம், மாசிலாமணி, சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து நாகை மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற செல்வராஜ், சுப்பராயன் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, நாகை மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன் உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்ட விவசாயிகள், தற்போது பெய்துவரும் கோடை மழை காரணமாக உழவுப் பணிகளை மேற்கொண்டு குறுவை சாகுபடி மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். ஆனால் ஆற்றுப் பாசனத்தை மட்டும் நம்பியுள்ள நாகை மாவட்டத்திற்கு காவிரி நீர் இந்த ஆண்டு சரிவர கிடைக்குமா? குறுவை சாகுபடி மேற்கொள்ளலாமா? என்ற கேள்வியை நாகை மாவட்ட கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவர் பாலையூர் எஸ் ஆர் தமிழ்செல்வம் எழுப்பி உள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (07.06.24) மாலை 4 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகையில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வை.செல்வராஜ். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நேற்று இரவு அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்பொழுது திமுக மாவட்டச் செயலாளர்கள் பூண்டி கலைவாணன், கௌதமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (07.06.24) மதியம் 1 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகையில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் பிரதி மாதம் 2வது செவ்வாய்க்கிழமைகளில் அரசு மருத்துவமனைகளிலும், 2 வது வெள்ளிக்கிழமைகளில் வேதாரண்யம் சுற்று வட்டாரங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் நடைபெறும் என ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு, புகைப்படம் கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.