Nagapattinam

News June 21, 2024

நாகையில் உள்ள அரசு ஐடிஐ விடுதியில் ஆய்வு ‌

image

நாகை அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் செயல்படும் விடுதியில் நேற்றிரவு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் உத்தரவின்படி, இன்று (ஜூன்.21) காலை அதிகாரிகள் விடுதியில் ஆய்வு செய்தனர். சமையலறை மற்றும் பொருட்கள் வைப்பு அறையிலும் ஆய்வு செய்தனர்.

News June 21, 2024

நாகை: 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

image

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதி உதவி திட்டப்பணிகளை சமூக நலத்துறை மற்றும் வருவாய் துறையிடம் ஒப்படைத்து கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொள்ளும் தாய்-சேய் நலப்பணி தடுப்பூசி பணி மற்றும் குடும்ப நலப் பணிகள் நடைபெற உரிய உத்தரவு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 பேர் பங்கேற்றனர்.

News June 21, 2024

தமிழ்நாடு காவிரி விவசாய சங்க உயர்மட்ட குழு உறுப்பினர் காலமானார்

image

திருக்குவளை வட்டம் வாழக்கரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் என். பாலசுப்பிரமணியன். இவர் தமிழ்நாடு காவிரி விவசாய சங்க உயர்மட்ட குழு உறுப்பினராகவும்
திமுக அவைத்தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு விவசாயிகள் சங்கத்தினர், திமுகவினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News June 21, 2024

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: ஆட்சியர் கள ஆய்வு

image

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் தேத்தாக்குடி வடக்கு ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பயனாளிகளை “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

News June 20, 2024

இந்திய விமானப்படையில் ஆள்கள் சோ்ப்பு: ஜூலை 28 கடைசி நாள்

image

இந்திய விமானப்படையின் அக்னிவீா் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் ஆள்சோ்ப்பு தோ்வுக்கு ஜூலை 8-ஆம்தேதி முதல் 28-ஆம்தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். அக்னிவீா் வாயு தோ்வுக்கு 2004 ஜூலை 3-ஆம்தேதி முதல் 2008 ஜன. 3-ஆம்தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

News June 20, 2024

உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டம் – ஆட்சியர் ஆய்வு

image

வேதாரண்யம் அருகே புஷ்பவனம் ஊராட்சியில் நெகிழி மறுசுழற்சி மையத்தில் நெகிழி மறுசுழற்சி முறைகள் குறித்து உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), ரஞ்ஜீத் சிங் உள்ளார்.

News June 19, 2024

234 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் – எடப்பாடி

image

நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா இன்று காலை நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றுப் பேசினார். அப்போது, வறட்சி வரும்போது எல்லாம் நிவாரணத் தொகை வழங்கிய கட்சி அதிமுக என்றார். மேலும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.

News June 19, 2024

குறைந்த வாடகைக்கு விவசாய கருவிகள்

image

விவசாய கூலி தொழிலாளர்களின் பற்றாக்குறையை சரி செய்யும் வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடப்படுகின்றன. எனவே நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இதனை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் நேற்று தெரிவித்துள்ளார்.

News June 19, 2024

பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் மனு

image

நாகப்பட்டினம் சிவசக்தி நிறுவனத்தில் முதலீடு செய்த பலருக்கு பணம் திரும்ப வழங்கப்படாமல் உள்ளதாக எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாகையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் மக்கள் முன்னேற்ற பொதுநல சங்க மாநிலத் தலைவர் விஜயராகவன் தலைமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று மனு அளித்தனர்.

News June 18, 2024

நாகை: ஜூன்.20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டத்தை ஒட்டி ஜூன்.20ம் தேதி ஒருநாள் மட்டும், நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த மாதம் 6ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!