India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டத்தில், வணிகம் மற்றும் தொழில் தொடங்குவதற்கான திட்டங்களுக்கு மானியம் பெறலாம் என ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா். தமிழக அரசின் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வியாபாரம், தொழில் செய்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு நாகை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.
நாகை மாவட்ட திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை இணைந்து, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஏடிஎம் மகளிா் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது. இம்முகாமில் 22 தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தகுதியானவா்களை தோ்வு செய்தனா். இதற்காக, 450 மாணவா்கள் பதிவு செய்தனா். நோ்முகத் தோ்வில் 82 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
நாகை கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி ஜூன்.26ஆம் தேதி அளிக்கப்படுகின்றது. இதில், நாட்டுக்கோழிகளின் இனங்கள் வளர்ப்பு முறைகள், கொட்டகை அமைப்பு, குஞ்சுகள் பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் 04365 247123 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலை கழக உதவி பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
18 வயது நிறைவடையாத பெண்ணுக்கு குழந்தை திருமணம் நடத்தி வைப்பவர்களுக்கு 2 ஆண்டு கடும் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும் 18 வயது நிரம்பாத பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு கடும் சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டு சேர்த்து விதிக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடா வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் நீர்முளை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே இன்று(ஜூன்.23) காலை டீக்கடையில் டீ குடித்துவிட்டு அமர்ந்திருந்த ராஜாங்கம்(55) கோவிந்தராஜ்(50) இருவரின் மீதும் கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் சம்பவ இடத்தில் இருவரும் உயிரிழந்தனர்.
நாகை மாவட்டத்தில் வெளிமாநில மதுவகைகள் கள்ளச்சாராயம் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பவர்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து பொதுமக்கள் 9498181257 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது 8428103090 என்ற அலைபேசி எண்ணிலோ தகவல் தரலாம். இது தொடர்பாக தகவல் தருபவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் ஹர்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெளிமாநில சாராய கடத்தல் மற்றும் சாராய விற்பனை தொடர்பாக தீவிர தேர்தல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று சட்டவிரோதமாக சாராயம் & மது விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொதுவாக பௌர்ணமி தினத்தில், தென்படும் முழு நிலவை பலரும் தரித்திரம் செய்வது வழக்கம். சூரிய பகவானை, தமிழர்கள் எவ்வாறு வழிபடுகிறார்களோ அதற்கு இணையாக சந்திர பகவானையும் வழிபடுவது இன்றும் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் நேற்று இரவு தென்பட்ட முழு நிலவை பலரும், வழிபட்டனர். நிலவின் பிரகாச ஒளி மற்றும் அதன் பிம்பம் கடல் நீரில் அற்புதமாக தென்பட்டது.
நாகை மீனவ இளைஞர் கடலோர பாதுகாப்பு ஊர்காவல் படையில் காலியாக உள்ள 16 பணியிடங்களில் சேர 18 முதல் 50 வயது வரை உடைய 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த மீனவர் இனத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி உடையவர்கள் உரிய ஆவணத்துடன் ஜூலை.20 ஆம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ள நேர்முக தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம் என காவல்துறைக் கண்காணிப்பாளர் ஹர்சிங் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் நாகை, கீழ்வேளூர், கீழையூர் திட்டச்சேரி, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்
தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில், 15 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், சுமார் 1000 லிட்டர் சாராயம் மற்றும் 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Sorry, no posts matched your criteria.